Wednesday, May 20, 2009

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.




நடந்து முடிந்த தேர்தல் ஒரு கசப்பான உண்மையை உணர்த்துகிறது. இலங்கை தமிழர்கள் பிரச்சனைகளை இலங்கை தமிழர்கள்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும். தமிழ் நாட்டு மக்களைம் தமிழக அரசியல்வாதிகளையும் நம்புவது மண் குதிரையை நம்பி ஆறóறை கடப்பதற்கு சமம். அதிமுக தோற்றுவிட்டது என்பதற்காகவோ திமுக அதிக இடங்கள்வெற்றி பெற்றுவிட்டுது என்பதற்காவோ சொல்லவில்லை. காங்கிரஸ் அதிக (9) இடங்கள் வெற்றி பெற மக்கள் வாக்களித்துவிட்டார்கள் என்ற ஆதங்கம் தான்.

தமிழக காங்கிரஸ் இதுவரை இலங்கை தமிழர் பிச்சனைகளாகட்டும், தமிழ் நாட்டு மக்களின் ஜீவாதாரப் பிரச்னை முல்லை பெரியார், காவிரி தண்ணீர், பாலாறு தண்ணீர் மற்றும் அன்றாட பிரச்சனைகளாகட்டும், இதுவரை குரல் கொடுத்தது இல்லை. இலங்கை தமிழர் பிரச்சனை முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டு போவதற்கு மத்தயில் ஆளும் காங்கிரஸ் தான் காரணம் என்று கூறினால் அது மிகையாகாது. இலங்கையிலிருந்து வரும் சொய்திகள் அத்தனையும் கசப்பாகவு ம் அதிர்ச்சியாகவும் இருக்கின்றது. பிரபாகரன் சுட்டு கொல்லப்பட்டார் என்று இலங்கை ராணுவம் கூறுவது உண்மையாக இருக்குமானால் இலங்கை தமிழர்கள் மீண்டும் 30 வருடம் பின் நோக்கி சென்றுவிட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். அத்தனை கசப்பான செய்திகளும் வதந்தியாகத்தான் இருக்கவேண்டும், என்று உலகத்தில் உள்ள அத்தனை தமிழர்களின் வேண்டுதல்.

இலங்கை தமிழர்களுடைய பிரச்னைகளை6 கோடி தமிழர்க
ள் பக்கதில் இருந்தும் தீர்வு காண முடியவில்லை என்றால் நம் தமிழக மக்களிடம் ஒற்றுமை இல்லை என்பதைதான் காட்டுகிறது. இலங்கை தமிழர் பிரச்சனை தீரக்கபப்படமுடியாமைக்கு என்ன காரணம். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான் எல்டிடிஇ இயக்கம் தடை செய்யப்பட்டது. அதன் பிறகு தான் ஒவ்வொரு நாடாக எல்டிடிஇ இயக்கம் தடை செய்யப்பட்டு வந்தது. அடுத்தது கலைஞர், ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் அவர் நினைத்திருந்தால் பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டுவந்திருக்கமுடியும். அன்று தமிழர்களை காப்பாற்றுவதற்கு டில்லிக்கு தந்தியும் கடிதமும் அனுப்பியவர் இன்று மந்திரி பதவி வாங்குவதற்கு டில்லி விரைகிறார்.தமிழர்கள் பிரச்சனைகளைக்காட்டிலும் அரசியல் ஆதாயம்தான் அவருக்கு முக்கியம். அடுத்து பழ நெடுமாறன் தமிழர்களுக்காவும் தமிழ் நாட்டு பிரச்சனைகளுக்காவும் உண்மையிலேயே குரல் கொடுப்பவர் அதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் அவரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. நெடுமாறனுக்கும் வைகோவுக்கும் பொரிய வித்தியாசம் இல்லை, கலைஞர் எதிர்ப்பு அரசியல் செய்வதை கடமையாக கொண்டுள்ளார். அடுத்து ராமதாஸ் இவர் ஒரு இந்தியாவின் தலை சிறந்த அரசியல் வியாபாரி. இப்படி தமிழர்கள் பிரச்சனை பின்னடைவு ஆனதற்கு அனைத்து தலைவர்களும் ஒரு வகையில் காரணமாவார்கள். கலைஞர் அவர்களே நடந்தவை நடந்தவையாக இருகட்டும். நடப்பவை நல்லவையாகட்டும். தமிழக மக்கள் அமோக வொற்றி உங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். ஆகவே இலங்கையில் தமிழர்கள் சம அந்தஸ்துடன் வாழ அனைத்து முயற்சிகள் செய்யவேண்டும். என தமிழக மக்கள் சார்பாக கலைஞரை கேட்டுக்கொள்கிறோம்.

1 comment:

Anonymous said...

verry good news