தவறான வழியில் கிடைக்கும் வொற்றியைவிட நேர்மையாக கிடைக்கும் தோல்வியே சிறந்தது.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மத்தியில் அமோக வொற்றி பெற்றுள்ளது. தமிழ் நாட்டில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பொற்றுள்ளது.தமிழ் நாட்டில் திமுக வின் வெற்றி எதை காட்டிகிறது, இந்த தேர்தலில் தமிழ் நாட்டில் புதிய அத்தியாயத்தை ஆளும் திமுக கூட்டணி தொடங்கி வைத்துள்ளது.
இனி எந்த தேர்தல் தமிழ் நாட்டில் வந்தாலும் பணம் இல்லையென்றால் வெற்றி பெறுவது கடினம். அந்த அளவுக்கு பணம் புகுந்து வினையாடிவிட்டுது. இந்த புதிய கலாச்சாரத்தை தொடங்கி வைத்த(திருமங்கலம் இடைத்தேர்தல்) பொருமைஅத்தனையும் மு.க. அழகிரிக்கே. பணம் மட்டுமே வொற்றிக்கு காரணமா? இல்லை, திமுக வின் ரூ 1கிழோ அரிசி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.வொற்றிக்குப் பின்னால் சிறிய கூட்டல் கழித்தல் கணக்கு உள்ளது.அந்தந்த கட்சிகளின் வாக்கு வங்கி சதவிகிதப்படி தான்,இந்த வொற்றி அமைந்துள்ளது. திமுக+காங்கிரஸ்+ விடுதலைசிறுத்தைகள் கட்சிகளின் வாக்கு வங்கி சிதறாமல் வாக்கு இக் கூட்டணிக்கு கிடைத்துள்து. அதிமுக+பமக+மதிமுக+கம்யூனிஸ்ட் இந்த கூட்டணிக்கு வாக்கு வங்கி சிதறிவிட்டது. அதிமுகவின் வாக்குகளை விஜயகாந் பிரித்துவிட்டார். மற்றும் பமக ஒரு வட்டார கட்சி அதற்கு தமிழ் நாட்டில் வாக்குகள் இல்லை என்பதை உறுதியாகிவிட்டது.மற்றும் ஜெயலலிதாவின் தனி ஈழம் என்ற முழக்கம் தமிழக மக்கள் நம்பவில்லை, ஏனென்றால் ஜெயாவின் கடந்த கால அரசியல் முன்னுக்குபின் முரணாணவை.இலங்கைப் பிரச்சனை இத் தேர்தலில் பிரதிபலித்துள்ளது. தங்கபாலு, மணிசங்கர் அய்யர், இளங்கோவன், ஆகியோர் தோல்விக்கு இலங்கைப் பிரச்சனை முக்கிய காரணம். ஊடகங்களின் இரட்டிப்பால் இலங்கை தமிழர் பிரச்சனை கிராமங்களுக்கு சென்றடையவில்லை, மிகப் பெரிய ஊடகங்கள் (டிவி, நாளிதழ்) திமுகவினரிடம் உள்ளது. இதுவும் அதிமுக கூட்டணி தோல்விக்கு ஒரு காரணம். ஆகையால் இந்த தேர்தலில் வொற்றி பொற்றவர்கள் பொருமைபடுவதற்கு ஒன்றுமில்லை.
1 comment:
good report
Post a Comment