Wednesday, August 12, 2009

போடா... பன்னி ...



SWINEFLU
யாரையாவது திட்டவேண்டுமானால் போடா... பன்னி ...என்று திட்டுவார்கள் ஆனால் இன்று பன்றி என்ற வார்த்தையை கேட்டாலே இந்திய நாடே அதிர்கிறது. இதுவரை டாக்டர் உட்பட பதினைந்துக்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர்.
தமிழ் நாட்டில் சென்னையில் பன்றி காய்சலால் சிறுவன் இறந்து விட்டான். மற்றும் பலருக்கு பன்றியின் வைரஸ் தாக்குதல் அறிகுறி தென்படுவதால், தமிழ் நாட்டில் பீதி பற்றிக்கொண்டது. நகரப்பகுதிகளில் உள்ள விழிப்புணர்ச்சி கிராமப்பகுதிகளில் இல்லை. எனது நண்பருக்கு பன்றி காய்சல் பற்றி கூறும்போது பன்றி காய்சல் பன்றிக்கு தான் வரும், என்று சர்வசாதாரணமாக சொல்கிறார். மனிதனை பன்றி இனதுடன் சேர்த்துவிட்டார்.
பன்றி காய்சல் நோயிலிருந்து எவ்வாறு தப்புவது?
இது ஒரு தொற்று நோய் ஆகும். hospital, கல்வி நிறுவனங்கள், மற்றும் பொது இடங்கள், எங்கு நோக்கினாலும், முககவசம்,அணிந்து மக்கள் காணப்படுகினர். 1000 பேருக்கு தொற்று ஏற்பட்டால் அதில் 50 பேர் கடுமையாக பாதிக்கபடுகின்றனர். ஒருவர் இந் நோயிக்கு பலியாகிறார்.
பன்றிகாய்சல் நோயின் அறிகுறி என்ன? அவ்வாறு
அறிகுறி தென்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும்.
இருமல், கடுமையான காய்சல், தொண்டை வலி, தலைவலி, மூக்கு ஒழுகுதல், தலைவலி,வாந்தி, வயிற்றுப்போக்கு, இவைகள் தென்பட்டால் உடனடியாக டாக்டரிடம் சென்று சிகிச்சைப்பெற்றால் பன்றி காய்சலிலிருந்து, விடுதலைப்பெறலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பெரியவர்கள், மற்றும் சிறுவர்கள், கரபிணிப்பெண்கள், இதயநோய் உள்ளவர்கள், ஆஸ்துமா, நுரையீரல் நோய் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேன்டும். இந்த நோய்யிலிருந்து எவ்வாறு தப்புவது? அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். சத்துள்ள பழங்கள், மற்றும் பருப்பு வகைகள், காய்கறிகள் உணவில் அதிகம் சேர்கவேண்டும்.
அடிக்கடி கை கால் உடல் அனைத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும்.
நன்றாக தூங்க வேண்டும். முக்கியமாக மக்கள் அதிகமாக கூடும் பஸ், ரயில் நிலையங்கள், மார்கெட் போன்ற இடங்களுக்கு அவசியம் ஏற்பட்டால்ஒழிய செல்லவேண்டாம். அவ்வாறு செல்ல நேர்தால் முக கவசம் அணிந்து செல்லுங்கள். நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்ளை பார்க நேர்ந்தால் கண்டும் காணாமல் சென்றுவிடுங்கள்.

4 comments:

கலையரசன் said...

பதிவர் நண்பருக்கு உதவிடுவோம் !!
http://kalakalkalai.blogspot.com/2009/08/blog-post_12.html

யூர்கன் க்ருகியர் said...

Thanks.

venkat said...

நண்பர் கலையரசன்அவர்களே பின்னூட்டதிற்கும், உங்கள் மனசுக்கும் நன்றிகண்ணா!

RAGUNATHAN said...

nalla pathivu