Wednesday, May 13, 2009

தமிழரின் மனதில் நீங்காத இடம் பிடித்த கலைஞர்


நல்ல நேரத்தில எடுக்கப்படும் தவறான முடிவும், தவறான நேரத்தில்
எடுக்கப்படும் சரியான முடுவும், பாதகமான விளைவை ஏற்படுத்தும்
முடுவு எடுப்பதில் காலம் சரியான பங்கு வகிக்கிறது.

கலைஞர் அவர்களே நீங்கள் எடுத்த தவறான முடிவால் இன்று இலங்கையில் நம்முடைய சகோதர சகோதிரிகள் மற்றும் தாய்மார்கள் குழந்தைகள் நமது இனம் பூண்டோடு அழிக்கப்பட்டு வருகிறது. நீங்கள் மட்டும் சரியான முடிவு எடுத்திருந்தால் நமது இனம் பாதுகாக்கப்பட்டிருக்கும், நமது இனம் தலை நிமிர்ந்து நடைபோட்டிருக்கும். பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்! குடும்ப உறவு சிக்கலில் மாட்டிக்கொண்டு சுயநலவாதியின் மொத்த உருவமாக காட்சியளிக்காறீர்கள். கலைஞர் அவர்களே நாங்கள் உங்களை சிங்கம் என்று நினைத்தோம். சிங்கம் வயதானாலும் சிங்கமாகத்தான் இருக்கும், ஆனால் நீங்கள் நரியாக மாறிவிட்டீர்கள்.

உங்களுடைய அபரிதமான ஞாபக சத்தியினாலும் புத்தி சாதுரியத்தினாலும், முன்பு எப்பொழுதோ ஜெயலலிதா இலங்கையை பற்றி கூறிய வார்த்தைகளை திரும்பத் திரும்ப சொல்லி அதி புத்திசாலி என்று காட்டிக்கொண்டியிருக்கிறீர்கள்.
ஜெயலலிதா தனி ஈழம் தான் தீர்வு என கூறிய வார்த்தைகளை நாங்கள் முழுவதும் நம்பவில்லை, ஆனாலும் அதை சரியான நேரத்தில் எடுத்த சரியான முடிவாக நினைக்கின்றோம்.அந்த வார்த்தை உலகத் தமிழர்கள் நெஞ்சில் பாலை வார்த்திருக்கிறது.

ஒரு ரூபாய்க்கு 1கிலோ அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி ஏழை எளிய குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச அடுப்பு, பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் நினைவு கோட்டை, திருவள்ளுவருக்கு குமரியில் 133 அடி சிலை, சென்னை மாநகரில் வள்ளுவர் கோட்டம்,சென்னைக் கடற்கரையில் தமிழ்ச் சான்றோர் சிலைகள்,கொல்லிமலையில் வல்வில்ஓரிக்குச் சிலை, தமிழ் தாத்தா உ.வே.சா நினைவில்லம், இப்படி உங்கள் சாதனைகளை அடுக்கிக்கொண்டே பேகலாம். நாங்கள் பெருமைப்படுகிறோம். இதையெல்லாம் ஜெயலலிதாவிடம் எதிர்பாக்க முடியாது.

ஜெயலலிதாவின் கடந்த கால அரசியலை பார்க்கும்பொழது தமிழக மக்களுக்கு நம்பிக்கை வர மறுக்கிறது. ஆனால் உங்களிடம் நம்பிக்கை வைத்தோம். அற்ப அரசியல் ஆதாயத்துக்காக இலங்கை விசயத்தில் கண்டும் காணாமல் இருந்துவிட்டீர்கள்.
அந்த கருணா காட்டிக்கொடுத்தார், இந்த கருணா (நிதி) கண்டும் காணாமல் இருந்துவிட்டார் என்ற அவபெயரை தமிழ் இனம் உள்ளவரை மறக்காது.

கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேன் . அதில் நீங்கள் ஏறி பயணம் செய்யலாம் என்று உங்கள் டி.வி.யில் வேளை தவறாமல் கூவிய போதே நாங்கள் விழித்திருக்க வேண்டும்......எம்மினம் வேதனையில் துடித்து, படகேறி வரும்போது தாயை இழந்து, குழந்தையை பறிகொடுத்து கடலில் தூக்கி வீசி விட்டு கேவலம் இந்த உயிரைக் கையில் பிடித்து கரை சேர்ந்ததே. அப்போதும் நீங்கள் வெறும் கட்டுமரக் கதையைத் தானே டி.வி.யில் போட்டீர்கள். அப்போதும் மானாட மயிலாட போட்டீர்கள்.. செய்தியில் போர் நின்றது என்று புளுகினீர்கள்.
மொத்தத்தில் நீங்கள் இதயம் மரத்த வெறும் மரம் என்று நிரூபித்து விட்டீர்கள். எப்படி இருப்பினும் இனி உலகத் தமிழர்கள் மனத்தில் நீங்காத இடம் பிடித்து விட்டீர்கள். ஆம்....

தமிழினத் தலைவராக அல்ல... துரோகியாக....

5 comments:

RAGUNATHAN said...

செருப்படி...சூப்பர் பதிவு...

Unknown said...

இந்த பதிவே வேஸ்ட்!! காரணம் நீங்க என்னதான் சொன்னாலும் இந்த மஞ்சள் துண்டு மரமண்டைக்கு மண்டையில ஏறாது. எலக்ஷன் ரிசல்ட் பார்த்திட்டு மண்டையை போட்டால் சந்தோசம்.

Pulambal Ponnusami said...

கலக்கல் பதிவு. குடும்ப பிரச்சனைல, நாட்டு பிரச்சனைய மறந்த கலைஞரை ஒரு கிழி கிழிச்சிட்டீங்க !!

Senthil said...

very aptly written.
we will remember him as a person
who betrayed, back-stabbed tamils.

Anonymous said...

People have been projecting MK as a great administrator and relatively honest man. This notion is completeley wrong. True, Jayalalitha's 91-96 government was corrupt. But her 2001-2006 was far better except decision such as firing 1 lakh employees at a time. I am 34 years old and in my opinion, the current DMK governemnt is the most corrupt and poorly administered. You need to give atleast Rs. 50000 for a teacher's transfer. A lecturer's job costs you 13 lakhs. Any road work, you pay 15% to the regional minsiter. Contractor's have accounts with the ministers! If a contractor pays 15% to the minister 10% for the officials, how can you expect him to lay good roads or build a good building? If the work estimate exceeds 25 crores, that will be done by Arcot Veerasami's relatives from Andhra. IT minister Raja gave 1000 crores to Kanimozhi from his share that was earned from Spectrum scam. Azhagiri made the follwoing comment "We have been fishing IRAI MEEN (a small fish you get from ponds), my sister got a SURA (A large fish you get in ocean) in a single attempt. As a result, he wanted to fish SURA meen and is contesting Madurai Loksabha! He has given Rs. 500-1000/vote and he knows he will earn 10 times in a year. I have not heard anything of this magnitude in JJ government. The congress and DMK government must be removed for its corruption, poor administration and nonsense foreign policy. Sonia, Manmohan singh and MK are undoubtedly responsible for the genocide in SL. I wish Vaiko wins the election and roast sonia in the parliament.