Friday, January 15, 2010

தமிழகம், தமிழர்கள், பொங்கல்.

   தைபொங்கல்


 


தமிழர்களுக்கு தமிழ் மாதங்களில் முக்கியமான மாதம் தை மாதம். ஆடிப்பட்டம் தேடி விதை என்று கூறபவார்கள். ஆடி மாதம் விதைத்துவிட்டு, தை மாதம் அறுவடைக்கு தயாராகும் கதிர்களை விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருப்பார்கள். ஆகையால் தை மாதப் பிறப்பை சிறப்பாக வழிபட்டபபிறகே,பயிர்களை அறுபடை சொய்வார்கள். அதனால்தான் தைப்பிறந்தால் வழிப்பிறக்கும் என்று கூறுவார்கள். இதையே அறுவடைத்திருநாள் என்றும் கூறுவார்கள். கடனை வாங்கி விதைத்து விட்டு ஒய்வு இல்லாமல் உழைத்து பலனை எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்து ஆவலுடன் வரவேற்கும் மாதம் தை மாதம். தை பிறப்பை மூன்று நாள் விழவாக சிறப்பாக கொண்டாடுவார்கள். கிராமங்களில் சென்று பார்த்தால் அத்தனை சந்தோசமாக கொண்டாடுவார்கள். கிராமத்துக்கே உரிய விளையாட்டுகள் கபடி, வலுக்குமரம் ஏறுதல்,  ஜல்லிக்கட்டு அடக்குதல், போன்ற வீர விளையாட்டுகள் களைகட்டும்.  மூன்று நாள் பண்டிகையில் முதல் நாள் போகிப்பண்டிகையாகவும்,அடுத்த நாள் பொங்கலிடும் நாளாகவும், மூன்றாவது நாள் மாட்டுப்பொங்களாகவும் கொண்டாடப்படுகின்றன. போகிப்பண்டிகையன்று பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற பழ மெழிக்கேற்ப வீட்டில் உள்ள  பழைய பொருட்களை தீயிட்டு  கொளுத்திவிட்டு அல்லவை அழிந்து நல்லவை வரட்டும் என்று போகியை கொண்டாடி முடிப்பார்கள்.
இரண்டாம் நாள் தைப்பிறப்பை பொங்கல் நாளாக புதுப்பானையில் புது அரிசி,புதுப்பாலில், புதுவெல்ல்லம் உள்ளிட்டவற்றை கலந்து மஞ்ஞள் பானையைச் சுற்றிக்கட்டி வீட்டுக்கு வெளியே சூரியன் இருக்கும் திசையை நோக்கி வைத்து பொங்களிடுவார்கள். அரிசி நன்கு சமைத்து, பொங்கி வரும்பொழுது பொங்கலோ பொங்கல், பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக என்று குரலோடு குலவையிட்டு பானையை இறக்கி வைப்பார்கள்.பொங்கல் நன்றாக பொங்கி வந்தால் அந்த வருடம் நல்ல வளமும், நல்ல நலமும் அந்த வருடம் முழுவதும் இருக்கும் என்று தமிழர்கள் நம்பிக்கை.மூன்றாவது நாளாக நமக்காக பிரதிபலன் எதிர்பாரக்காமல் உழைத்த வாயில்லாத நன்றியுள்ள மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப்பொங்கல் விமரிசையாக கொண்டாடப்பபட்டது.
மேலே கூறியுள்ள தைப் பொங்கல்  தற்பொழுது தமிழ் நாட்டில் எப்படி கொண்டாடப்படுகிறது என்று பார்த்தால் பெருமூச்சிதான் வருகிறது. சென்னையை தாண்டி செங்கல்பட்டிலிருந்து, கன்னியாகுமரி வரை ரோட்டின் இரண்டு பக்கமும் நன்கு விளைந்த காடுகளும், ஒவ்வொரு ஊரின் முன்பும் அறுவடை செய்யப்பட்ட கதிர்கள் களத்துமேட்டில் அம்பாரமாக குவித்துவைக்கபட்டிருக்கும் காட்சி கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். ஆனால் இப்பொழுது தமிழகத்தில் விவசாயிகள் பிழைப்பி தேடி வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சென்றுவிட்ட நிலையில்  தைப்பொங்கல் சம்பிரதாயப்பொங்கலாக ஒரு சடங்காகிப்போனது. தற்பொழுது கிராமங்களில் உள்ள விளைநிலங்கள் அத்தனையும் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் நிளங்கள் கூறுபோடப்பட்டு விலைநிளங்களாக மாற்றப்பட்டு நிளங்கள் அத்தனையும் தரிசாக கண்றாவியாக காட்சியளிக்கிறது. தற்பொழுது பொங்கல் எவ்வாறு கொண்டாடப்படுகிறது, படத்தைப் பாருங்கள்.


 
நெல்லையில் பொங்கல்.


 வாடகைக்கு மாட்டைப்பிடித்து வந்து வைக்கும் கோவைப் பொங்கல்

 


 
கோபியில் கொண்டாடப்பட்ட பொங்கல்.


இத்தனைபேர் சேர்ந்து ஒரு மாட்டை அடக்குவது வீரமா (தம்மம்பட்டியில்)


 



 

திருப்பூரில் பொங்கல்.





உடுமலையில் கொண்டாடப்பட்ட பொங்கல்.
 


 

 

கோவைப் பொங்கல்.
 
பார்த்த படங்கள் அத்தனையும் நகரங்களில், கல்வி நிறுவனஙகள், அரசு அலுவலகஙகளில் பொங்கலுக்கு இரண்டொரு நாட்கள் முன்பு கொண்டாடப்பட்டது.
கிராமங்களில் பொங்கல் எவ்வாறு கொண்டாடப்படுகிறது. அடுத்த பதிவில் பார்போம் .