Thursday, June 24, 2010

செம்மொழி மாநாடு - சில காட்சிகள், சில சங்கதிகள்.


நேற்று காலை 10.30 மணிக்கு தேசிய கீதத்துடன் மாநாடு துவங்கியது.

அமொக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் செ. குழந்தை சாமி, இலங்கை பேராசிரியர் சிவதம்பி ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாட்டை மலரை கவனர் வெளியிட ஜனாதிபதி பெற்றுக்கொண்டார். பேராசிரியர் அஸ்கோ பர்போலாவுக்கு, கலைஞர் செம்மொழி தமிழ்விருது, மற்றும் 10 லட்சம் ரூபாய்கான  காசோலையும், ஜம்பொன் திருவள்ளுவர் சிலையிம் வழங்கப்பட்டன.
மாலை கோவை மருத்துவக் கல்லூ  முன் அமைக்கப்படிருந்த மேடையிருந்து முதல்வர், கவர்னர், ஜனாதிபதி ஆகியோர் இனியவை நாற்பது  - அலங்கார ஊர்வலத்தைக் கண்டு களித்தனர்.


தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றது எப்படி?
மாநாட்டில் முதல்வர் பேச்சு

தமிழகத்துக்கு என் இதயத்தில் தனியிடம் - பிரதிபா பாட்டீல்.

 இப்படி கோலாகாலமாக துவங்கிய தமிழ் செம்மொழி மாநாட்டை சிலர் ஏன் விமர்சனம் செய்கிறார்கள்?

தமிழுக்கு விழா எடுப்பது ஒரு குத்தமாயா?
தமிழ் விழா எடுக்க கலைஞருக்கு தகுதியில்லையா? - இப்படி பல கண்டனங்களுக்கு நடவில்  மாநாடு நடந்துகொண்டுருக்கிறது.
தமிழுக்கு விழா என்றால் தமிழனுக்கு விழா எடுதமாதிரிதான் என்று கூறுகின்றனர்.
தமிழினம்  வாழ்வா சாவா என்று பேராடிக்கொண்டிருக்கிறது, ஒரு பக்கம் இந்த நேரத்தில் தேவையா? என்றும் கூகின்றனர்.

நண்பர்களே! உலக தமிழ் மாநாட்டினால் தமிழ் மொழிக்கு  பெருமையா? தேவையா? என்பதை பின்னூட்டம் மூலமாக தெரியப்படுத்தவும்.
மாநாடு நடக்கும் 5 நாட்களும் படங்கள் வரும். மாநாட்டின் கடைசி நாளன்று உலக செம் மொழி மாநாடு பற்றிய சிறப்பு பதிவு வரும்

No comments: