Thursday, September 3, 2009

அதிசியம் ஆனால் உண்மை.









அன்பின் வெளிப்பாடு

கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்று பகவத்கீதையில் கிருஷ்ணபரமாத்மா ஓர் இடத்தில் அழகாக கூறுவார். பிரதிபலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்தால் உரிய நேரத்தில் உரிய பலன் கிடைக்கும் என்பதை புலவர் வெங்கட்டராமன் விசயத்தில் அதிசியம் நடந்துள்ளது.

அரசு உதவி பெறும் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப் பள்ளி குருசாமிப்பாளையத்தில் தமிழாசிரியராகப் 1954}ம் முதல் 1985 ஆண்டு வரை பணிபுரிந்தார். ராசிபுரத்திலிந்து திருச்சொங்கோடு செல்லும் வழியில் இருக்கிறது குருசாமிப்பாளையம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு செங்குந்தர் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் முன்னால் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.
புலவர் வெங்கட்டராமனிடம் படித்த முன்னால் மாணவர்கள் இன்று பலர் தொழில் அதிபராகவும், பலர் அரசு மற்றும் தனியார் நிறுவனóகளில் உயர்ந்த பதவிகளில் வேலைசொய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் தமிழாசிரியர் வெங்ட்ராமன் மட்டும் ஏழ்மை நிலையில் சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இதைப் பார்த்த முன்னால் மாணவர்கள் மனக்கவலை அடைந்தனர்.

நாங்க இந்தளவுக்கு உயர்ந்த நிலையில் இருப்பதற்கு எங்க தமிழய்யாதான் காரணம். பாடத்தை மட்டும் சொல்லிக்கொடுக்கவில்லை. வாழ்கையையும், மற்றும், பல நல்ல விசயங்களையும் சொல்லிக்கொடுத்தார். இன்றளவும் எங்களுக்கு வாழ்கைக்கு உபயோகமாக இருக்கிறது. அப்படி எங்கள் வாழ்கையை உயர்த்திய தமிழய்யா வாடகை வீட்டில் இருக்கக் கூடாது, என்று முடிவு சொய்து புது வீடு ஒன்று 10 லட்ச ரூபாய் செலவில் புது வீடு ஒன்று கட்டி கொடுத்துள்ளனர்.

புதிய வீட்டிற்கு குரு நிவாஸ் என்ற பெயர் சூட்டி சாவி கொடுக்கும் நிகழ்ச்சி, கிரஹப்பிரவேசம் செப்டம்பர் ( 4 - 9 - 2009 )ஆம் தேதி நடக்கிறது.

குரு சிஷ்யன் உறவுக்கு முன் உதாரணமாக உள்ளனர் இந்த முன்னால் மாணவர்கள். குரு சிஷ்யன் உறவு என்று சொல்லும்பொழுது இரண்டு பேருமே உயர்ந்து நிற்கின்றனர். முன்னால் மாணவர்கள் தமிழய்யாவைப்பத்தி பேசும் பொழுது, தமிழய்யா கற்றுக்கொடுத்த வாழ்கையைப் பற்றிய நல்ல விசயங்களுக்கு முன்னால் இந்த 10 லட்ச பணமதிப்பெல்லாம் ரெம்ப சாதாரணம் என்று அடக்கமாக கூறுகின்றனர். ஆசிரியர் மாணவர்களைப்பற்றி பேசும் பொழுது, என்ன சொல்றதுன்னே தெரியலைங்க.. இப்படியும் மாணவர்கள் இருப்பார்களா! இவங்க எல்லோரும் என்னோட மாணவர்கள்னு சொல்றதைவிட, நான் அங்களோட ஆசிரியர்னு சொல்லிக்கிறதுலதான் எனக்குப் பெருமை! நன்னூல் - ங்கிற இலக்கண நூல்ல, நல்ல மாணவர்களுக்கு சில இலக்கணம் சொல்லி இருக்காங்க. நன்னூலை இப்ப எழுதி இருந்தா ... என்னுடைய மாணவர்களைத்தான் நல்ல மாணவர்கள் என்று உதாரணம் காட்டி இருப்பார்கள். என்று சொல்லும்போதே புலவருக்கு ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

எழுதறிவு சொல்லிக்கொடுத்தவன் இறைவனுக்கு ஒப்பானவர் என்பதை புலவர் வெங்கடராமன் நிரூபித்துவிட்டார்.

வாழ்க பல்லாண்டு வாழ்த்துவோம்.

25 comments:

தர்ஷன் said...

உண்மையில் அம்மாணவர்கள் போற்றுதலுக்குரியவர்கள் என்பதில் ஐயமில்லை
தகவலுக்கு நன்றி

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

படிக்க மகிழ்வாக இருந்தது. அம்மாணவர்கள் பாராட்டுக்குரியோர்.
ஆசிரியரும் நல்லாசிரியராகத்தான் இருந்திருக்கவேண்டும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

படிக்க மகிழ்வாக இருந்தது. அம்மாணவர்கள் பாராட்டுக்குரியோர்.
ஆசிரியரும் நல்லாசிரியராகத்தான் இருந்திருக்கவேண்டும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//எழுதறிவு சொல்லிக்கொடுத்தவன் இறைவனுக்கு ஒப்பானவர்//

உண்மை..
அருமையான மாணவர்களை பெற்ற ஆசானும் கொடுத்து வைத்தவர்தான்.
நல்ல பதிவு வெங்கட்

Radha N said...

என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
அளவற்ற மகிழ்வாக தெரிகிறது.

Anonymous said...

Great! Neyam innum marainthu vidavillai

venkat said...

நண்பர் தர்ஷன் வருகைக்கு நனóறி

venkat said...

thanks johan - paris

Shakthiprabha (Prabha Sridhar) said...

நல்ல விஷயம் படிப்பதே அபூர்வமாகி விட்டது. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. மன நிறைவாக இருக்கிறது

Unknown said...

வக்கெடுத்தவன் வாத்தியாரு போக்கெத்தவன் போலீஸ்காரன் என்று
கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அந்த வாத்தியார் வேலைக்கு ஒரு மரியாதை உண்டு பண்ணிவிட்டார் தமிழ் அய்யா வெஙகட்ராமன் வாழ்க.

anbu said...

இந்த காலத்தில் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களை மாணவர்கள்
ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார்கள்.ஆனால் வெங்கட்ராமன்
ஆசிரியரை மதித்து வீடு கட்டி கொடுத்திருக்கிரார்கள் என்றார்
ஆசிரியர் மிகவும் நல்லவர். மாணவர்கள் மிகவும் நல்லவர்கள்.

Unknown said...

தமிழ் ஆசிரியர் வெங்கட்ராமன் போல் பலர் இருக்கின்றனர்.
அவர்களை எல்லாம் வெளி உலகத்துக்கு கொண்டுவரவேண்டும்.

mythoughts said...

ஆசிரியர் மாணவர் உறவு முறை இவ்வாறு இருக்கவேண்டும்.

குடுகுடுப்பை said...

T.V.Radhakrishnan said...

//எழுதறிவு சொல்லிக்கொடுத்தவன் இறைவனுக்கு ஒப்பானவர்//

உண்மை..
அருமையான மாணவர்களை பெற்ற ஆசானும் கொடுத்து வைத்தவர்தான்.
நல்ல பதிவு வெங்கட்
//

ஆமோதிக்கிறேன். ஒரு மாணவனாக , ஒரு ஆசிரியரின் மகனாக.

RAGUNATHAN said...

குரு கேட்டதால் கட்டை விரலை கொடுத்தான் ஏகலைவன். இன்று குரு கேட்காமலேயே தட்சிணை கொடுத்துள்ள அந்த முன்னாள் மாணவர்கள் பாராட்டுக்குரியவர்கள். நல்ல பதிவு.

Unknown said...

ஆசிரியர்கள் மேல் மரியாதை கூடுகிறது.

வடுவூர் குமார் said...

படிக்கவே நெகிழ்வாக இருக்கு.

venkat said...

குடுகுடுப்பைக்கு நன்றி.

venkat said...

சக்திபிரபாவுக்கு நன்றி

venkat said...

நாகுக்கு நன்றி

கார்த்திக் பிரபு said...

pullarikudhu thanks for sharing :)

geethappriyan said...

ரொம்ப நல்ல பதிவு
மிக நல்ல மாண்வர்கள்,மிக நல்ல ஆசிரியர்.
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

Unknown said...

/--அதிசியம் ஆனால் உண்மை. --/

இந்த வார கல்கியில் படித்தேன். நல்ல ஆன்மாவைப் பற்றிய கட்டுரை. பகிர்விற்கு நன்றி...

venkat said...

நண்பர் காத்த்திகேயன் அவர்களுக்கு நன்றி. பின்னூட்டம் என்பது ஒரு சடங்காகிவிட்ட நிலையில்
மனம் திறந்து பின்னூட்டம் அளித்தமைக்கும், வருகைக்கும் நன்றி.

venkat said...

நண்பர் கிருஷ்ண பிரபு அவர்களுக்கு நன்றி.