Sunday, March 28, 2010

வலைப்பதிவு நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

        அலுவலகத்தில் பக்கதில் அமர்ந்திருக்கும் சென்னை நண்பருக்கு வேலைப்பளு அதிகமாகும் பொழுதும், வேலையில் சலிப்பு ஏற்படும் பொழுதும், உடனே கேண்டீனுக்கு சென்று விட்டு புத்துணர்ச்சியுடன் திரும்பி வருவார். கேண்டின் புறப்படும் பொழுது உடன் நமக்கு அழைப்பு வரும். நண்பரே நீங்கள் சென்று வாருங்கள் என்று சொல்லி முடிக்கும் முன் (அவருடைய பாஷையிலே அவர் சொல்வதை)   XXXXXXXXXX , எப்பபாத்தாலும் பதிவு, பின்னூட்டம்னு அது இதுன்னு டேய் மாத்தி மாத்தி சொறிஞ்சிகிறிங்க. இவனுக அவனுகளுக்கு ஓட்டுப் போடுறது, அவனுக இவன்கழுக்குது ஓட்டு போடுறது. இதுக்கு எதற்கு நேரத்தை வேஸ்ட் பன்றானுக. என்று கூறிகொண்டே சென்றுவிடுவார்.

(நாகரீகம் கருதி சென்னை நண்பர் கூறியதை XXXXXXXXX அப்படியே போட வில்லலை) அப்படி பேசுகிறார் என்பதற்காக நண்பர் மோசமானவர் இல்லை. தங்கமானவர், இனிமையானவர். சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பதனால் பேசும் பொழுது சென்னை பாஷை கூடவே ஒட்டிக்கொள்கிறது.

அவருக்கு பதில் சொல்வதற்கு சந்தர்பத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். மார்ச் 22 உலக தண்ணீர் தினம் வந்தது.

வலையுலக நண்பர்கள் கலக்கிவிட்டார்கள். ஒரு நண்பர்  தண்ணீரை சேமிப்பது எப்படி என்பதை 40 வினாடிகளில் ஒரு குறும்படம் போட்டு அனைத்து நண்பர்களுக்கும் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொண்டார்., மற்றொரு நண்பர் வேதத்தில் தண்ணீரை சேமிப்பதற்கு கூறிய கருத்துக்களை தக்க ஆதாரத்துடன் எழுதியிருந்தார். அடுத்து ஒரு நண்பர் புவி வெப்பமடைவதற்கான காரணங்கள், அவற்றை குறைப்பதற்கான என்ன செய்யவேண்டும் என்றும், மற்றும் பல நண்பர்கள் சமூக அக்கறையுடன் பல பதிவுகள் எழுதியிருந்தனர்.  அத்தனையும் முத்துக்கள்.  மற்றொரு நண்பர் எனது வீட்டைச் சுற்றி மரங்களை நட்டியுள்ளேன்,  என்று செயலிலேயே காட்டிவிட்டார். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அத்தனையையும் எனது சென்னை நண்பரை அழைத்து காட்டினேன். வலையுலகம் என்பது பொழுபோக்குக்கு மட்டுமே என்று நினைத்திருந்த நண்பருக்கு அதிர்ச்சி.

இப்பொழுதெல்லாம் நண்பர் பிளாக் எப்படி எழுதுவது மற்றும் அதைப்பற்றிய விவரங்களை சேகரிப்பதற்காக அதிக ஆர்வம் காட்டுகிறார். அவருக்கும் வாழ்த்துக்கள். அவரிடமிருந்தும் நிறைய நல்ல பயனுள்ள தகவல்களை எதிர்பார்போம்.

எச்சரிக்கை - பாகம்-2

கடந்த பதிவில் பருவ நிலை மாற்றத்தின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாவதை மிருகங்களினாலும் தாங்கிக்கொள்ளமுடியாமல் யானை இறந்த சொய்தி. அதேபோல் மற்றுமொரு நிகழ்ச்சி. ஆழியாறு வனப்பகுதியிலிருந்து பொள்ளாச்சி நகருக்குள் வலம் வந்த சிறுத்தை. புவி அளவுக்கு அதிகமாக வெப்பமடைவதால் காட்டில் வாழும் வன விலங்குகளினாலும் காட்டில் வாழமுடியாமல் இறந்து விடுகிறது. அல்லது  வனத்தை ஒட்டியுள்ள மக்கள் வசிப்பிடங்களுக்கு விருந்தாளியாக வந்துவிடுகிறது. பொள்ளாச்சி திரு நீல கண்டர் வீதியில் பூட்டிக்கிடந்த பட்டறை அருகே சிறுத்தை ஓய்வைவொடுத்துக்கொண்டுருந்ததைப் பார்த்த பொது மக்கள் பயந்து உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் உயிருடன் பிடிப்பதற்காக  மயக்கமருந்தை துப்பாக்கி மூலம் சுட்டு பிடித்தன்ர். 30 கிலோ எடையுள்ள 2 வயது சிறுத்தைப்புலியை மீண்டும் தண்ணீர் பள்ளம் என்ற இடத்தில் கொண்டுபேய் விட்டுவிட்டனர்.

வீட்டின் சுற்றுப்புறத்தில் இடமிருந்தால் பயன்படுத்திய தண்ணீரை கொண்டு மரம் வளருங்கள். தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள். -நம்மால் முடிந்த சிறிய உதவி
  
     
   
நான் ஒரு இரண்டுவருட குழந்தை என்னைப்பிடிப்பிப்பதற்கா ஊசி, மயக்கமருந்து,துப்பாக்கி .......
  
  

                             சிறுத்தை  பிடிப்பதை வேடிக்கைப் பார்க்கும் பொதுமக்கள்.


                                   கால் நடை மருத்துவர் மனோகரன்,மற்றும் டி.எஸ்.பி,

   

பிடிபட்ட சிறுத்தைப் பாருங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறது. என்னை பிடிப்பதற்கா? இத்தனைப் படைகள் என்று அப்பாவியாக கேட்பதுபோல் இருக்கிறது.

நண்பர்களே! படித்துவிட்டு உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். அப்படியே ஓட்டும் போட்டுவிடுங்கள்.
நன்றி

Thursday, March 18, 2010

எச்சரிக்கை.

இந்த யானையின் சாவு மனிதர்களுக்கு விடும் எச்சரிக்கையாகும்.
வன விலங்குகளால்கூட வெப்பத்தை தாங்கிக் கொள்ளமுடியவில்லை.
பவானி வன சரகத்தில் தொங்குமராஹாடாவில் குடி தண்ணீர்காக அலைந்து திரிந்து ஓய்ந்து கோடை வெப்பத்தின் தாக்குபிக்கமுடியாமல் சுருண்டு விழுந்து 20 வயது பெண் யானை சாவு.
 
 
 

     வருடத்திற்கு வருடம் வெப்பத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வனத்தில் உள்ள விலங்குகள் காட்டெருமை, யானைகள், மான்கள் மற்றும் பல மிருகங்கள் கூட்டம் கூட்டமாக தண்ணீருக்கு காட்டைவிட்டு வெளியே வருகின்றன. மக்கள் தொகை பெருக்கம், அளவுக்கு அதிகமான மரங்களை வெட்டப்படுதாலும், காட்டை பராமரிக்க தவறியதாலும்  பருவ நிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. வனவிலங்குகளால் கூடவெப்பத்தை தாங்க முடியவில்லையென்றால் மனிதன் எம்மாத்திரம். இதிலிருந்து மனிதன் பாடம் கற்றுக்கொள்ளவில்லையென்றால் மனிதகுல அழிவு வெகு தொலைவில் இல்லை.

Wednesday, March 10, 2010

தடுக்கி விழுந்தது யார்?



          ஆரம்பமாவது பெண்ணுகுள்ளே , ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே.  ஒரு கவிஞர் தீர்க்க தரிசனதுடன் சொல்லிய வார்த்தைகள்.  இன்று அத்தனை சாமியார்களின் சங்கதியும் பெண்ணாலே வீதிக்கு வந்துள்ளது. பிரோமானந்தா, ஜயேந்தரர், தேவநாதன், நித்தயானந்தம்,மற்றும் பலர். சாமியார்கள் என்று யாரும் இல்லை.  அனைவரும் மனிதர்களே. மனிதர்களுக்கே உரிய  குணாதிசியங்கள் அத்தனையும் அனைவருக்கும் பொது. மனிதர்கள் செய்யும் காரியங்களைதான் மேலே கூறிய ஆசாமிகள் சொய்துள்ளனர். ஆனால் இவர்கள் சொய்யும் பொழுது மட்டும் மக்கள் ஆவேசம் அடைவது ஏன்? ஆன்மீகம் என்ற காவி ஆடைகளுக்குள் பாதுகாப்பாக அமர்ந்து கொண்டு தப்பு சொய்யும் பொழுது மக்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. சாதாரணமாக இருந்த ராஜசேகரனை நித்தியானந்தனாக்கியது யார்? பொது மக்கள் தானே.

         ஆலயம் தொழுவது சாலவும் நன்று. கடவுளை வணங்குவற்கு இடைத்தரகர்கள் ஏன்?  நித்தியானந்தனை எடுத்துக் கொண்டால் பிரமாதமாக பிரசங்கம் செய்கிறார். பகவத் கீதையை புட்டு புட்டு வைக்கிறார், என்று மக்கள் உச்சு கொட்டுகிறார்கள். இதில் அதிசியப்படவோ? விசேசம் என்று சொல்வதற்கோ ஒன்றும்மில்லை. எந்தஒரு விசயத்தையும் முறையாக பயிற்சி செய்தால் அசத்திவிடலாம். அப்படித்தான் சின்ன வயதிலிருந்து பகவத்கீதை, வேதம் என்று பயின்றதனால் அதை தெளிவாக செய்கிறார்.
அதனால் அவரிடம் சக்தியிருக்கிறது என்று கூறுவது அறியாமை.

   
  
     
         மேலே உள்ள  படத்தைப் பாருங்கள் சிறுமி கயிற்றின் மீது  தலையில் கும்பம் வைத்துக்கொண்டு எதையும் பிடிக்காமல் நடந்து வருகிறாள். இதுவும் ஒருவகை பயிற்சிதான். முறையான  பயிற்சியிருந்தால், எதையும் யாராலும் செய்யலாம். நித்தாயானந்தனுக்கு காசு பார்க்கும் வித்தை தெரிந்ததனால் நடிகையின் மடியில் கோடியில் புரளுகிறான். இந்த சிறுமிக்கோ அந்த வித்தை தெரியாததனால் பிச்சை எடுக்கிறாள்.

     எப்படி தடுக்கி விழுந்தார்? கல்வி இன்று எப்படி ஒரு  வியாபாரமாகிவிட்டதோ!  அதேபோல் ஆன்மீகமும் வியாபாரமாகிவிட்டது. வியாபாரம் என்று வந்துவிட்டால் போட்டிகள், சூது, கபட நாடகம், எல்லாம் வந்துவிடும். நித்தியானந்தரின் , சீடர்களின் சூழ்சியில் பலிகடா ஆகிவிட்டார் என்றும், பெங்களூரில் நிலம் வாங்கியதில் முன்னால் மந்திரிக்கும், நித்தியானந்தத்திற்கும், பிரச்சனை ஏற்பட்டு அதில் பொறிவைத்து சிக்கவைக்கபட்டார் என்றும் கூறுகிறார்கள்.  நேரம் சரியில்லை என்றால் புடலங்காயும் பாம்பாக மாறும் என்று கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுதான் இவர் விசயத்தில் நடந்துள்ளது. கடந்த மாதம் கோவைக்கு வந்தார். வஉசி மைதானத்தில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் பண அறுவடை பலமாக செய்யபட்டது, மற்றும் பல பக்தர்கள்  வீடுகளுக்கு சென்று ஆசிர்வாதம் என்ற பெயரில் காலடி எடுத்து வைத்து கையை தூக்கி காட்டிவிட்டால் பாமர பக்தனுக்கு பரம சந்தோசம், ஒரு வீட்டுக்கு இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை வசூல் செய்ததாகவும், இதனால் கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சாமியாரின் பக்தர்களுக்கு பயம் வந்து அவர்களும் நித்தியானன்தரை சிக்க வைத்ததாக ஒரு வதந்தி உண்டு. எது எப்படியோ உப்பை திண்ணவன் தண்ணீரைக் குடித்துதான் ஆகவேண்டும். தடுக்கி விழுந்தது நித்தியானந்தமா? பொது மக்களா?

          கல்கி பகவான் ஆஸ்ரமத்தில் மோசடி மற்றும் பல தவறுகள் நடப்பதாக தகவல்கள் வந்துகொண்டுஇருக்குறது. இத்தனைக்கும் பிறகும் கல்கி பகவானைப்பற்றி தவறாக பத்திரிக்கையில் எழுதாதே என்று பத்திரிக்கைக்கு எதிராக ஆர்பாட்டம் சொய்யும் பெண்கள் கீழே உள்ள படத்தைப் பாருங்கள். 



இப்படிப்பட்ட மக்கள் இருக்கும் வரை போலி சாமியார்களுக்கு கொண்டாட்டம்தான். பணிவிடைதான் செய்தேன். ரஞ்சிதா பேட்டி.
( தெரிஞ்சிதான் கேட்கிறேன்  பணிவிடை செய்யும் பொழுது மேலே படுத்து, புரண்டு, புரண்டுதான் பணிவிடை செய்வியா?)

      சட்டதிற்கு புறம்பாக தப்பு செய்யவில்லை? அனைவரும் அமைதி காக்கவும், விரைவில் உங்கள் முன் வருவேன் நித்தியானந்தன் பேட்டி.
(ஒன்னும் புரியமாட்டிங்குதே! தலை கிர்ருனு சுத்துதே!  இப்பவே கண்ணை கட்டுதே. நண்பர்களே சட்டத்துக்கு புறம்பான தவறு, சட்டத்துக்கு உட்டபட்ட தவறு  அப்படினு இருக்குதா?  சொல்லுங்களேன்.)

 ஐயா ராசா கண்ணா நீ திரும்பி வருவே குத்தாட்டம் போடுவே ஏன்னா? உனக்கு வெக்கம்,  மானம், சூடு, சொரனை, எதுவுமே இல்லை. எங்களுக்கு தான்  கொஞ்சம் கஸ்டமாக இருக்குறது. இல்லறம் அல்லது நல்லறம் அன்று. ஒளவைப் பாட்டி 2000 வருசத்துக்கு முந்தியே சொல்லியிருக்காங்க. அதனால நீ ஒரு கல்யாணம் கட்டிகோ, இச்சையெல்லாம் தீத்துட்டு, பிறகு வா ராசா.

Thursday, March 4, 2010

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்?

 

எப்படி இருந்த நான்


 

                                                           இப்படி ஆயிட்டேன்? 

நித்தியானந்த என்ற போலி சாமியார் எப்படி சிக்கினார்?  ஆன்மீகம் என்ற போர்வையில் உலா வரும்  டுபாக்கூர்  நித்யானந்தன் கண்றாவி காட்சி சந்தி சிரிக்க செய்தது எப்படி?. மர்மங்கள் நிறைந்த திகிலூட்டம், திடிக்கிடவைக்கும் தகவலுடன்  அடுத்த    பதிவு விரைவில்!!??!!??

Wednesday, March 3, 2010

அஜால் குஜால் சாமியாரின் அந்தரங்கம்.

 

                 கடந்த மாதம் காஞ்சியில் தேவநாதன்,  இன்று நித்தியானந்தன்.  





              மேலே உள்ள படத்தில் உள்ள சாமியாரை தமிழகத்தில் தெரியாதவர்கள் யாரும் இருக்கமுடியாது.  கதவை திற காற்று வரட்டும் என்று பிரபல  வார பத்திரிக்கையில் ஆன்மீகத்தொடர் ஒன்று எழுதி வருகிறார். கதவை திறந்தார் காற்று வந்ததோ இல்லையோ நடிகை வந்தார் ராஜசேகர் என்ற நித்தியானந்த போலி சாமியார் அரகேற்றம் நடத்திவிட்டார்.
காஞ்சிபுரம் தேவநாதநாதன் கண்றாவி கருவரை காட்சிகள் கடந்த மாதம் பட்டிதொட்டியெங்கும் சிடி, மற்றும் இணைய தளத்தின் வழியாக  நாறியது. இன்று நித்தாயானந்தன் என்ற போலி சாமியார் அந்தரங்க கண்றாவி வீதியொங்கும் நாறுகிறது ( சன் நõயூஸ்) . டில்லியில் சாய்பாபா பக்தர் என்று கூறிக்கொண்டு சாய்பாபா கோயில் கட்டி விபச்சாரம் செய்த சிவ்முரத் திவேதி  என்ற போலி சாமியார் டில்லி போலிசால் கைது சொய்யப்பட்டார்.
கல்கி பகவான் ஆசிரமம் சூறை, கல்கி பகவான் அவதாரம் என்று கூறிக்கொண்டு ஆந்திராவில் ஒரு போலி சாமியார் பக்தர்களிடம் பணமேசடி சொய்ததாக புகார். மேலே கூறப்பட்ட அத்தனை நிகழ்வுகளும் ஏன் தொடர்கிறது.

 போலி சாமியார்களை மட்டும் குறை கூறி பயன் இல்லை. போலி உருவாவதற்கு காரணம் அறியாமையில் உள்ள மக்கள் தான். மக்கள் என்று பொதுவாக கூறினால் யார்? அடிதட்டு மக்கள் அன்றாட காய்சிகள்  நித்தாயனந்த ஆசிரமத்துக்கோ அல்லது கல்கி பகவான் ஆசிரமத்துக்கோ பேவது இல்லை.  நடுத்தர, மற்றும் மேல்தட்டு மக்களே அவ்வாறான ஆசிரமத்துக்கு செல்வதும், அள்ளிக்கொடுப்பதும் போலிகள் உருவாவதற்கு ஒருவகையில் காரணமாக இருக்கின்றனர்.

அடித்தட்டு மக்கள் அவர்கள் வசதிக்கு கிராமத்தில் சின்ன சின்ன போலி சாமியார்கள் தோன்றுகõறார்கள்.  ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாற்றும் போலி சாமியார்கள் இருப்பார்கள். கடவுள் இருக்கிறார் என்று சொல்பவனை நம்பலாம், கடவுள் இல்லை என்று சொல்பவனை நம்பலாம். நான்தான் கடவுள் என்று சொல்பவனை நம்பாதே. சாமியை நம்பு ஆசாமியை நம்பாதே.  பேராசை, வஞ்சகம், அவசரம், அறியாமை, இருக்கும் வரை ஒரு பெரியார் இல்லை லட்சம் பெரியார் வந்தால் கூட மக்களை திருத்தமுடியாது. நேற்று தேவநாதன், இன்று நித்தியானந்தன், நானை வேறொருவன்.