Friday, September 25, 2009

நவராத்திரி & ஆயுத பூஜை




    நவராத்திரி திருவிழா ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 9 நாட்களில்  நடைபெறும்.   நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு. ஒன்பது இரவுகள் தொடர்ந்து நடைபெறுவதால், இதற்கு நவராதóதிரி என்று அழைக்கப்படுகிறது.    துர்க்கா, லெஷ்மி,      சரஸ்வதி     ஆகிய    மூன்று தெய்வங்களும் ஒன்று சேர்ந்து உருவான பராசக்தியால்  மகிஷாசுரனை     வதம்     செய்வதைத்தான்       நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.
 இதில் முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையாகவும் அடுத்த மூன்று நாட்கள் லெஷ்மி பூசையாகவும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி பூசையாகவும் ஆக மொத்தம் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.     இந்நாளில் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு வைத்து வழிபடுவார்கள்.

    சிலர் வீடுகளில்  கொலு வைப்பதற்கென்றே தனியாக படிகள் வைத்திருப்பார்கள்.  நவராத்திரி நாட்களில்.அப்படிகளில் அவரவர்கள் தகுதிக்கேற்றவாறு விதவிதமான பொம்மைகள் வைத்து வழிபடுவார்கள்.இந்த நாட்களில் துர்கா, லெஷóமி, சரஸ்வதி மூலமும் ஒன்று சேர்ந்து பராசக்தியாக கொலு வீற்றிருப்பதாக ஒரு ஐதீகம்.  ஒன்பது நாட்களும் மவுன விரதம் கடைப்பிடித்தால் உடல் உள்ளத்திற்கு நன்மை உண்டு

    வீடுகளில் கொலு வைத்திருப்பவர்கள் மாலை நேரத்தில் தினமும் ஒவ்வொரு வகையான சுண்டல்கள் அல்லது ஏதாவது ஒரு பதார்த்தங்கள் செய்து கொலுவிற்கு வைத்து வழிபட்டு பின்பு அவரவர்களுக்கு தெரிந்தவர்கள்,  அக்கம் பக்கம் குடிஇருப்பவர்கள் எல்லோரையும் அழைத்து அவர்களுக்கும் வெற்றிலை, பாக்கு, பழம், மற்றும் அவர்கள் செய்த பிரசாதங்களையும் கொடுத்து மகிழ்வார்கள்.

    சரஸ்வதி பூஜை அன்று அனைத்து அலுவலகங்கள், கடைகள் மற்ற எல்லோரும் சரஸ்வதிக்கு பூஜை செய்து வழிபடுவார்கள்.

    கடைசி நாளான விஜய தசமி அன்று பராசக்தியானவள்   மகிஷாசுரனை  வதம் செய்வதாக ஐதீகம். இதையே நாம் நவராத்திரியாக கொண்டாடி மகிழ்கிறோம்.

மேலே கூறியவைகளை அனைவரும் கொண்டாடுவார்கள்  என்று சொல்லமுடியாது. ஆனால் விஜய தசமிக்கு  அடுத்த நாள்  ஆயுத பூஜை வெகு சிறப்பாக பட்டி தொட்டிஅனைத்து இடங்களிலும் கொண்டாடப்படும்.உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை .ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.

விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல் நன்று.


Monday, September 21, 2009

இந்த கொடுமையை பாரீர்!?....!?


 நினைத்தது நடந்தே விட்டது.


 கோவையிலிருந்து 30 மைல்கல் தொலைவில்
 அன்னூர் - க்கு முன்பாக   இன்று (21-9-2009)காலை 11 மணி வாக்கில் 250 ஆடுகள்  தனியாருக்கு சொந்தமான இரண்டு சக்கர வாகனத்துத்துக்கு
 தேவைப்படும் சங்கிலி (CHAIN) தயாரிக்கும் தொழிற்ச்சாலையிலிருந்து
வெளியாகும் சுத்திகர்க்கப்படாத தண்ணீரைக் குடித்த 250ம் அதிகமான
ஆடுகள் செத்துக்கிடக்கினறன. தொழிற்ச்சாலையிலிருந்து சுத்திகரிக்கபடாமல் தண்ணீரை வெளியில் வெளியில் அனுப்பியது  தவறு. காலை 11 மணிக்கு நடந்த சம்பவம் மாலை வரை தொழிற்ச்சாலைக்கு சம்பந்தப்பட்டவர்களோ
அதிகாரிகள் வர்கமோ எந்த விக நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
 இன்று ஆடுகளுக்கு நடந்தது நாளை மனிதர்களுக்கும் இது நடக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள சாய மற்றும் தொழிற்ச்சாலைக் கழிவுகள் அனைத்தும் சுத்திகரிக்படாமலே நொய்யல், காவிரி ஆகிய ஆறுகளில் கலக்கப்படுகின்றன.
 நீதி மன்றம்  தலையிட்டும் பிரச்சனை முடியவில்லை.   

ஆடுகளுக்கு ஏற்பட்ட கதி மனிதனுக்கு ஏற்பட்ட பிறகு அரசாங்கமும் அதிகார வர்கமும்  கண்களை திறக்குமோ? என்னவோ?

Friday, September 18, 2009

கண்காட்சிகளில் மட்டுமே இனி பார்க்க முடியும்.


 
 
 
 
 
அவசர உலகம் எதிலும் வேகம் வேகம். வாழ்க்கை எந்திரமயமாகிவிட்டது.
    
     அரிதாகிபோன மாட்டு வண்டிப் பயணம், குதிரை வண்டிப் பயணம், சினிமாவில்   மட்டுமே இப்பொழுது சாத்தியப்படுகிறது.

 கோவையில் ஒரு கான்வென்ட ஸ்கூல் எதிரில்  குழந்தைகளை ஏற்றிக்கொண்டு
பயணத்திற்கு  தயாராக இருக்கும் (ஒரு அரிய கண்கொள்ளா காட்சி) குதிரை வண்டி.

அடுத்த தலைமுறையினருக்கு குதிரை, மாட்டு வண்டிகளை கண்காட்சிகளில் மட்டுமே  காட்டவேண்டியது இருக்கும்.

Saturday, September 12, 2009

ஆனந்தம்..

உன்னதமான அனுபவம்.

கோவை வேளாண்மைதுறை பல்கழைக்கழகத்துக்கு  தமிழ் நாட்டில்
முக்கியமான இடம் உண்டு. இங்கு படித்து பல்வேறு துறைகளிலும், பல்வேறு இடங்களிலும் பணி புரிந்துவிட்டு  ஓய்வு பெற்று தாத்தாவாகிவிட்ட முன்னால் மாணவர்களின் சந்துப்பு இன்று (12-09-2009) கோவை வேளான்மை பல்கழைக்கழகத்தில்  நடந்தது. நீண்ட நெடிய நாட்களுக்குப் பிறகு சந்தித்துக்கொண்டவரக்ள் ஒருவரை ஒருவர் ஆர தழுவிக்கொண்டனர்.
பேரன் பேத்தி சொத்து சுகம் அனைத்தையும் அனுபவித்துவிட்டு வந்த தாத்தாக்களுக்கு அங்கு கிடைக்காத ஆனந்தம் பழைய நண்பர்களை பார்த்தபொழுது அடைந்த ஆனந்தம் பார்பதற்கு பரவசமாக இருந்தது. மற்ற குடும்ப உறவுகளைக்காட்டிலும், நண்பன் என்ற உறவு மேண்மையானது.

Thursday, September 3, 2009

அதிசியம் ஆனால் உண்மை.









அன்பின் வெளிப்பாடு

கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்று பகவத்கீதையில் கிருஷ்ணபரமாத்மா ஓர் இடத்தில் அழகாக கூறுவார். பிரதிபலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்தால் உரிய நேரத்தில் உரிய பலன் கிடைக்கும் என்பதை புலவர் வெங்கட்டராமன் விசயத்தில் அதிசியம் நடந்துள்ளது.

அரசு உதவி பெறும் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப் பள்ளி குருசாமிப்பாளையத்தில் தமிழாசிரியராகப் 1954}ம் முதல் 1985 ஆண்டு வரை பணிபுரிந்தார். ராசிபுரத்திலிந்து திருச்சொங்கோடு செல்லும் வழியில் இருக்கிறது குருசாமிப்பாளையம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு செங்குந்தர் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் முன்னால் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.
புலவர் வெங்கட்டராமனிடம் படித்த முன்னால் மாணவர்கள் இன்று பலர் தொழில் அதிபராகவும், பலர் அரசு மற்றும் தனியார் நிறுவனóகளில் உயர்ந்த பதவிகளில் வேலைசொய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் தமிழாசிரியர் வெங்ட்ராமன் மட்டும் ஏழ்மை நிலையில் சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இதைப் பார்த்த முன்னால் மாணவர்கள் மனக்கவலை அடைந்தனர்.

நாங்க இந்தளவுக்கு உயர்ந்த நிலையில் இருப்பதற்கு எங்க தமிழய்யாதான் காரணம். பாடத்தை மட்டும் சொல்லிக்கொடுக்கவில்லை. வாழ்கையையும், மற்றும், பல நல்ல விசயங்களையும் சொல்லிக்கொடுத்தார். இன்றளவும் எங்களுக்கு வாழ்கைக்கு உபயோகமாக இருக்கிறது. அப்படி எங்கள் வாழ்கையை உயர்த்திய தமிழய்யா வாடகை வீட்டில் இருக்கக் கூடாது, என்று முடிவு சொய்து புது வீடு ஒன்று 10 லட்ச ரூபாய் செலவில் புது வீடு ஒன்று கட்டி கொடுத்துள்ளனர்.

புதிய வீட்டிற்கு குரு நிவாஸ் என்ற பெயர் சூட்டி சாவி கொடுக்கும் நிகழ்ச்சி, கிரஹப்பிரவேசம் செப்டம்பர் ( 4 - 9 - 2009 )ஆம் தேதி நடக்கிறது.

குரு சிஷ்யன் உறவுக்கு முன் உதாரணமாக உள்ளனர் இந்த முன்னால் மாணவர்கள். குரு சிஷ்யன் உறவு என்று சொல்லும்பொழுது இரண்டு பேருமே உயர்ந்து நிற்கின்றனர். முன்னால் மாணவர்கள் தமிழய்யாவைப்பத்தி பேசும் பொழுது, தமிழய்யா கற்றுக்கொடுத்த வாழ்கையைப் பற்றிய நல்ல விசயங்களுக்கு முன்னால் இந்த 10 லட்ச பணமதிப்பெல்லாம் ரெம்ப சாதாரணம் என்று அடக்கமாக கூறுகின்றனர். ஆசிரியர் மாணவர்களைப்பற்றி பேசும் பொழுது, என்ன சொல்றதுன்னே தெரியலைங்க.. இப்படியும் மாணவர்கள் இருப்பார்களா! இவங்க எல்லோரும் என்னோட மாணவர்கள்னு சொல்றதைவிட, நான் அங்களோட ஆசிரியர்னு சொல்லிக்கிறதுலதான் எனக்குப் பெருமை! நன்னூல் - ங்கிற இலக்கண நூல்ல, நல்ல மாணவர்களுக்கு சில இலக்கணம் சொல்லி இருக்காங்க. நன்னூலை இப்ப எழுதி இருந்தா ... என்னுடைய மாணவர்களைத்தான் நல்ல மாணவர்கள் என்று உதாரணம் காட்டி இருப்பார்கள். என்று சொல்லும்போதே புலவருக்கு ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

எழுதறிவு சொல்லிக்கொடுத்தவன் இறைவனுக்கு ஒப்பானவர் என்பதை புலவர் வெங்கடராமன் நிரூபித்துவிட்டார்.

வாழ்க பல்லாண்டு வாழ்த்துவோம்.

Tuesday, September 1, 2009

பிள்ளையாருக்கு நேர்ந்த அவமானம்-பாகம் 2




பிள்ளையாருக்கு நேர்ந்த அவமானம் என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு பதிவு போட்டிருந்தேன். அந்த பதிவு எந்தஅளவுக்கு உண்மை என்பதை சமீப நாட்களாக தமிழ் நாட்டில் நடந்து வரும், நிகழ்ச்சிகளே சான்று. கடந்த வாரம் திருப்பூரில் பிள்ளையார் ஊர்வலத்தில் கல்லெரி, கலாட்டா சம்பவங்கள் நடைபெற்றன.
நேற்று உதகையில் திங்கள்கிழமை (31-08-09) அன்று நடைபெற்ற வினாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் இரு பிரிவினர்களிசையே கல்வீச்சு, மோதல் ஏற்பட்டது.
கும்பலை கலைக்க போலீஸ்ஸôர் நடத்திய தடியடியில் 2 போலீஸ்ஸôர் உட்பட 30 அதிகமானோர் காயமடைந்தனர். இப்பிரச்சனை காரணமாக உதகை நகரமே போர்க்களமாக காட்சியளித்தது. ஏடிசி பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படும் அனைத்து அரசு போருந்துகளும், நிறுத்தப்பட்டன.
கடைகள் அனைத்தும் மூடப்பட்டன