Monday, December 13, 2010

இப்படியும் சிலர் .

ரஜினி பிறந்த நாள் - அனைத்துதரப்பினரும் வாழ்த்து. (மகிழ்ச்சி)
ஆனால் டிவி, ரேடியோ-வில் டிசம்பர் 12ம் தேதி வரும் ரஜினி காந் பிறந்த நாள் அறிவிப்புகள், மற்றும் நிகழ்ச்சிகள் வந்ததே தவிர   டிசம்பர் 11 நாள் பாரதியார் பிறந்த நாளைப்பற்றி எந்த ஒரு நிகழ்ச்சியும் வரவில்லை. (வாழ்க தேசப்பற்று)

எப்படியிருந்த நான் .


இப்படி ஆனதுக்கு தேவராஜ் - க்குதான்  நன்றி சொல்லனும் .

 தேவராஜ் என்ற ரஜினி  ரசிகர்.

என்னுடைய பார்வையில், ஒரு அரசியல் தலைவனுக்கு தொண்டனாகவோ, சினிமா நடிகனுக்கு ரசிகனாக இருப்பவன் மன நிலை பாதிக்கப்பட்டவனாகத்தான் இருப்பான். ஏனென்றால்  தன் குடும்பம் வறுமையில் சிக்கி அன்றாட வாழ்க்கைக்கே அல்லல்படும்பொழுது, இவன் தன் தலைவனுக்கோ, நடிகனுக்கோ தன்னுடைய உடல் ,பொருள் , ஆவி (ஒரு வித போதையில்)  அத்தனையும் இழந்து சின்னாப்பின்னமாகி, தான் மட்டுமல்லாது தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அத்தனைபேரையும் நடுத்தெருவுக்கு கொண்டுவந்து, நாசமாகிப்போன பல பேரை சந்தித்திருக்கிறேன்.


நடிகருக்கு பிறந்த நாள், மற்றும் புது படம் வெளிவரும் பொழுது,




கட் அவுட்களுக்கு பாலபிசேகம் செய்வது , பால் குடம் தூக்குவது

இப்படி பல அருவருக்கத்தக்க காரியங்களை செய்கிறார்கள் ..

        சமீபத்தில் நாளிதழில் புகைப்படக் கலைஞராக பணிபுரியும் நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ரசிகன் என்ற போர்வையில் பல நல்ல காரியங்கள் செய்யும் நல்லவர்களும் உள்ளனர்  என்று கூறி, தேவராஜ் என்ற ரஜினி ரசிகரைப்பற்றி கூறினார்.
 
      சீரனாயகன்பாலயத்தைச் சேர்ந்த தேவராஜ் என்ற ரஜினி  ரசிகர் கடந்த 14 வருடமாக ரஜினிகாந் பிறந்த நாள் டிசம்பர் 12 ஆம் நாளை முன்னிட்டு அனாதை சிறுவர்கள், முதியவர்கள், உடல் ஊனமுற்றோர், பிச்சைக்காரர்களுக்கு  இலவசமாக  முடிதிருத்தம் செய்கிறார்.





    தேவராஜை தொடர்புகொண்டு பேசியபொழுது, தலைவருடைய பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூருக்குச் சென்று இலவசமாக முடி திருத்தம் செய்துவிட்டு இப்பொழுதான் அனுப்பர்பாலயதுக்கு சில பேருக்கு முடி திருத்தும் செய்வதற்காக இங்கு வந்துள்ளேன்  என்று கூறினார். "உங்கள் தலைவருக்காக இப்படி ஊர் ஊராகச் சென்று வெட்டி வேலையைச் செய்தால் உங்கள் குடும்பத்தை யார் காப்பாற்றுவது?" என்று கேட்டபொழுது, "அப்படிச்சொல்லாதீர்கள். இதில் எனக்கு ஆத்ம திருப்தி உள்ளது.  மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தன்னால் இயன்ற உதவிகளை செய்யவேண்டும். நான் என்னுடைய தலைவன் பெயரில் செய்கிறேன் அவ்வளவுதான். என்னுடைய மகன் பெங்களூரில் சாப்டுவேர் கம்பெனியில் பணிபுரிகிறார். பெரிய பெண்ணை பெங்களூரில் திருமணம் செய்துவைத்துவிட்டேன். இளைய பெண் பி.இ முடித்துவிட்டு சென்னையில் வேலைசெய்கிறார்", என்றார்.


   நாரயணன் கிருஷ்ணன் தன்னலமற்ற தூய சமூக சேவை மூலம் தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர். படித்த நாரயணன் மட்டு மின்றி படிக்காத வெளியில் தெரியாத பல நல்ல உள்ளங்கள் ஆங்காங்கே இருக்கின்றனர்.   ஒரு பொறுப்புள்ள தந்தையாக மட்டுமில்லாது, அர்தமுள்ள ரசிகனாகவும் இருக்கும் தேவராஜுக்கு ஒரு ஜே போடுவோம்.









       



1 comment:

சிவகுமாரன் said...

ரஜினியைப் போலவே அவரது ரசிகர்களும் வெகு மெச்சூர்டாக இருக்கின்றனர். ரஜினியிடம் குடிகொண்டிருக்கும் அமைதி அவரது ரசிகர்களையும் மாற்றியிருப்பது
கவனிக்கத் தக்கது.