புதிய கீதாசாரம்...கிருஷ்ணனின் வாக்கு.... படத்தை அழுத்தி பெரிதாக்கி படியுங்கள்.
Wednesday, May 27, 2009
Wednesday, May 20, 2009
நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
நடந்து முடிந்த தேர்தல் ஒரு கசப்பான உண்மையை உணர்த்துகிறது. இலங்கை தமிழர்கள் பிரச்சனைகளை இலங்கை தமிழர்கள்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும். தமிழ் நாட்டு மக்களைம் தமிழக அரசியல்வாதிகளையும் நம்புவது மண் குதிரையை நம்பி ஆறóறை கடப்பதற்கு சமம். அதிமுக தோற்றுவிட்டது என்பதற்காகவோ திமுக அதிக இடங்கள்வெற்றி பெற்றுவிட்டுது என்பதற்காவோ சொல்லவில்லை. காங்கிரஸ் அதிக (9) இடங்கள் வெற்றி பெற மக்கள் வாக்களித்துவிட்டார்கள் என்ற ஆதங்கம் தான்.
தமிழக காங்கிரஸ் இதுவரை இலங்கை தமிழர் பிச்சனைகளாகட்டும், தமிழ் நாட்டு மக்களின் ஜீவாதாரப் பிரச்னை முல்லை பெரியார், காவிரி தண்ணீர், பாலாறு தண்ணீர் மற்றும் அன்றாட பிரச்சனைகளாகட்டும், இதுவரை குரல் கொடுத்தது இல்லை. இலங்கை தமிழர் பிரச்சனை முடிவுக்கு வராமல் இழுத்துக்கொண்டு போவதற்கு மத்தயில் ஆளும் காங்கிரஸ் தான் காரணம் என்று கூறினால் அது மிகையாகாது. இலங்கையிலிருந்து வரும் சொய்திகள் அத்தனையும் கசப்பாகவு ம் அதிர்ச்சியாகவும் இருக்கின்றது. பிரபாகரன் சுட்டு கொல்லப்பட்டார் என்று இலங்கை ராணுவம் கூறுவது உண்மையாக இருக்குமானால் இலங்கை தமிழர்கள் மீண்டும் 30 வருடம் பின் நோக்கி சென்றுவிட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். அத்தனை கசப்பான செய்திகளும் வதந்தியாகத்தான் இருக்கவேண்டும், என்று உலகத்தில் உள்ள அத்தனை தமிழர்களின் வேண்டுதல்.
இலங்கை தமிழர்களுடைய பிரச்னைகளை6 கோடி தமிழர்கள் பக்கதில் இருந்தும் தீர்வு காண முடியவில்லை என்றால் நம் தமிழக மக்களிடம் ஒற்றுமை இல்லை என்பதைதான் காட்டுகிறது. இலங்கை தமிழர் பிரச்சனை தீரக்கபப்படமுடியாமைக்கு என்ன காரணம். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான் எல்டிடிஇ இயக்கம் தடை செய்யப்பட்டது. அதன் பிறகு தான் ஒவ்வொரு நாடாக எல்டிடிஇ இயக்கம் தடை செய்யப்பட்டு வந்தது. அடுத்தது கலைஞர், ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் அவர் நினைத்திருந்தால் பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டுவந்திருக்கமுடியும். அன்று தமிழர்களை காப்பாற்றுவதற்கு டில்லிக்கு தந்தியும் கடிதமும் அனுப்பியவர் இன்று மந்திரி பதவி வாங்குவதற்கு டில்லி விரைகிறார்.தமிழர்கள் பிரச்சனைகளைக்காட்டிலும் அரசியல் ஆதாயம்தான் அவருக்கு முக்கியம். அடுத்து பழ நெடுமாறன் தமிழர்களுக்காவும் தமிழ் நாட்டு பிரச்சனைகளுக்காவும் உண்மையிலேயே குரல் கொடுப்பவர் அதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் அவரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. நெடுமாறனுக்கும் வைகோவுக்கும் பொரிய வித்தியாசம் இல்லை, கலைஞர் எதிர்ப்பு அரசியல் செய்வதை கடமையாக கொண்டுள்ளார். அடுத்து ராமதாஸ் இவர் ஒரு இந்தியாவின் தலை சிறந்த அரசியல் வியாபாரி. இப்படி தமிழர்கள் பிரச்சனை பின்னடைவு ஆனதற்கு அனைத்து தலைவர்களும் ஒரு வகையில் காரணமாவார்கள். கலைஞர் அவர்களே நடந்தவை நடந்தவையாக இருகட்டும். நடப்பவை நல்லவையாகட்டும். தமிழக மக்கள் அமோக வொற்றி உங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். ஆகவே இலங்கையில் தமிழர்கள் சம அந்தஸ்துடன் வாழ அனைத்து முயற்சிகள் செய்யவேண்டும். என தமிழக மக்கள் சார்பாக கலைஞரை கேட்டுக்கொள்கிறோம்.

Sunday, May 17, 2009
தேர்தல் முடிவு ஒரு பார்வை(கூட்டல், கழித்தல்)
தவறான வழியில் கிடைக்கும் வொற்றியைவிட நேர்மையாக கிடைக்கும் தோல்வியே சிறந்தது.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மத்தியில் அமோக வொற்றி பெற்றுள்ளது. தமிழ் நாட்டில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பொற்றுள்ளது.தமிழ் நாட்டில் திமுக வின் வெற்றி எதை காட்டிகிறது, இந்த தேர்தலில் தமிழ் நாட்டில் புதிய அத்தியாயத்தை ஆளும் திமுக கூட்டணி தொடங்கி வைத்துள்ளது.
இனி எந்த தேர்தல் தமிழ் நாட்டில் வந்தாலும் பணம் இல்லையென்றால் வெற்றி பெறுவது கடினம். அந்த அளவுக்கு பணம் புகுந்து வினையாடிவிட்டுது. இந்த புதிய கலாச்சாரத்தை தொடங்கி வைத்த(திருமங்கலம் இடைத்தேர்தல்) பொருமைஅத்தனையும் மு.க. அழகிரிக்கே. பணம் மட்டுமே வொற்றிக்கு காரணமா? இல்லை, திமுக வின் ரூ 1கிழோ அரிசி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.வொற்றிக்குப் பின்னால் சிறிய கூட்டல் கழித்தல் கணக்கு உள்ளது.அந்தந்த கட்சிகளின் வாக்கு வங்கி சதவிகிதப்படி தான்,இந்த வொற்றி அமைந்துள்ளது. திமுக+காங்கிரஸ்+ விடுதலைசிறுத்தைகள் கட்சிகளின் வாக்கு வங்கி சிதறாமல் வாக்கு இக் கூட்டணிக்கு கிடைத்துள்து. அதிமுக+பமக+மதிமுக+கம்யூனிஸ்ட் இந்த கூட்டணிக்கு வாக்கு வங்கி சிதறிவிட்டது. அதிமுகவின் வாக்குகளை விஜயகாந் பிரித்துவிட்டார். மற்றும் பமக ஒரு வட்டார கட்சி அதற்கு தமிழ் நாட்டில் வாக்குகள் இல்லை என்பதை உறுதியாகிவிட்டது.மற்றும் ஜெயலலிதாவின் தனி ஈழம் என்ற முழக்கம் தமிழக மக்கள் நம்பவில்லை, ஏனென்றால் ஜெயாவின் கடந்த கால அரசியல் முன்னுக்குபின் முரணாணவை.இலங்கைப் பிரச்சனை இத் தேர்தலில் பிரதிபலித்துள்ளது. தங்கபாலு, மணிசங்கர் அய்யர், இளங்கோவன், ஆகியோர் தோல்விக்கு இலங்கைப் பிரச்சனை முக்கிய காரணம். ஊடகங்களின் இரட்டிப்பால் இலங்கை தமிழர் பிரச்சனை கிராமங்களுக்கு சென்றடையவில்லை, மிகப் பெரிய ஊடகங்கள் (டிவி, நாளிதழ்) திமுகவினரிடம் உள்ளது. இதுவும் அதிமுக கூட்டணி தோல்விக்கு ஒரு காரணம். ஆகையால் இந்த தேர்தலில் வொற்றி பொற்றவர்கள் பொருமைபடுவதற்கு ஒன்றுமில்லை.

Saturday, May 16, 2009
ஈழத்தில் நடப்பது என்ன? ராஜபட்சே பேட்டி...
எமது விசேச நிருபர் டொங்கிரி செல்லப்பாவுக்கு உலக மகா கொடூரன் ராஜபட்சே பல அதிர்ச்சி தகவல்களை வெட்கமின்றி கொடுத்துள்ள சிறப்பு பேட்டி. இதைக் கேட்ட டொங்கிரி அதிர்ச்சி தாங்காமல் ஜன்னி வந்து மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவுல் சேர்க்கப்பட்டுள்ளார். அதிர்ச்சி தகவல்களை கேட்ட நிருபருக்கே இந்த நிலைமை என்றால் அங்கு அவதிப்படும் எம் மக்களை நினைக்கும் பொழுது...................!?
நிருபர் டொங்கிரி : வணக்கம் ராஜபட்சே! (எத்தனையோ பேருக்கு போடுறோம் சல்யூட்டு....ங்கோ...நீயும் ஒன்னு வச்சுக்கோ) நேரடியாக விஷயத்துக்கு வருகிறேன். ஈழத்தில் நடப்பது என்ன? அப்பாவி தமிழர்களை நீங்கள் குண்டு போட்டுக் கொல்கிறீர்களாமே?
ராஜபட்சே: ஆத்தா எங்கள மட்டும் காப்பாத்து ஆத்தா. (இதுக்குத் தான் தமிழனுக்கு பேட்டி கொடுக்க வேண்டாம் னு நினைச்சேன்...தமிழனுக்கு வக்காலத்து வாங்கிறயே...அப்ப நீ புலிதாண்டா? சந்தேகமே இல்ல நீ புலிதான்....இவனப் புடிச்சு உள்ளே போடுங்கடா.) வாங்க தமிழ் நிருபரே...எல்லாம் ஆத்தா செயல்.
டொங்கிரி : விடுதலைப்புலிகளை எப்படி வீழ்த்தினீர்கள், உங்களுடைய போர் தந்திரங்க்ளை கூற முடியுமா?
ராஜபட்சே: ஆத்தா மட்டும் இல்லாட்டி நாங்க இன்னும் பங்கர்க்குள்ள புலிகள் விமானத்தை எதிர்பார்த்து படுத்திட்டிருப்போம். அது கிடக்கட்டும்... போர் தந்திரமாவது புடலங்காய்யாவது? நாங்கள் எங்கே போரிட்டோம், எல்லாம் இந்திய ராணுவம்ந்தான் போரிட்டு விடுதலைப்புலிகளை வீழ்தியது. எல்லாம் எங்கள் ஆத்தா அருள்ன்னுதான் சொல்லவேண்டும்.
டொங்கிரி : வந்ததிலேர்ந்து ஆத்தா...ஆத்தாங்கிறியே...ங்கோ... அது உங்கள் குலதெய்வமா?
ராஜபட்சே: இல்லை சோனியாதான்..
டொங்கிரி : அதாவது இத்தாலி ஆத்தா...சரி. நீங்கள் சொல்கிறபடி பார்த்தால் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு வந்திருக்குமே?
ராஜபட்சே: வந்திச்சே!
டொங்கிரி : கொந்தளிப்பு வந்திச்சினா எப்படி சமாளிச்சிங்கே?
ராஜபட்சே: நாங்க ஏன் சமாளிக்கனும், அதான் எங்கள் அண்ணன் கலைஞர் இருக்காருலே அவரு பார்த்துகிட்டார்.
டொங்கிரி :புரியும்படியாக சொல்லுங்க.
ராஜபட்சே:நாங்கள் அப்பாவி மக்களை கொல்லும்போதெல்லாம் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு வரும்.உண்மை அப்பாவி தமிழன் தீ குளித்து சாவான் அப்பொழுது எங்க அண்ணா கலைஞர் மனித சங்கிலி என்பார், உண்ணாவிரம் என்பார். உடன் தமிழ் உணர்வு மழுங்கடிக்கப்படும், தமிழ் உணர்வு நீர்த்துப்போகும்.நாங்கள் செய்யவேண்டிய வேலையை கலைஞர் செய்து முடிப்பார்.
டொங்கிரி :இது பயங்கர பித்தாலாட்டம் ஆகுமே? அதிகாரத்தில் இருக்கின்றவர்கள்தானே பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்யவேண்டும் அவர்களே உண்ணாவிரம் அது இது என்று காலத்தை கடத்தினால் எப்படி?
ராஜபட்சே: சரியாக சொன்னீர்கள் இலங்கையில் போர் நிறுத்தம் செய்! அப்பாவி தமிழர்களை கொல்லாதே! என்று இந்த ராஜபட்சே உண்ணாவிரதம் இருந்தால் எப்படி காமெடியாக இருக்குமோ, அதேபோல் தான் கலைஞர் உண்ணாவிரதமும்.
டொங்கிரி: தமிழ் நாட்டில் பத்திரிக்கை இருக்கிறார்களே அவர்கள் உங்கள் முகத்திரை கிழித்திருப்பார்களே?
டொங்கிரி:கிழித்தார்கள். நாங்கள் போடும் எலும்புத் துண்டுகளை நக்கிவிட்டு நாங்கள் சொல்வதை அப்படியே எழுதுபவர்கள் ஒரு வகை. உண்மை எழுதும் தமிழ் பத்திரிக்கையை கொஞ்சபேர்தான் படிப்பார்கள். அதனால எங்களுக்கு ஒரே ஜாலி...டெய்லி குண்டு குண்டா போட்டு தமிழர்களை கொன்னு கொன்னு விளையாடுவோம்......
டொங்கிரி: சரி தமிழ்நாட்டை விடுங்க, உலகநாடுகள் உங்களுக்கு அழுத்தம் கொடுத்திருக்குமே.
ராஜபட்சே: அதை எங்க ஆத்தா பார்த்துக்குவா, சங்கரமேனனை அனுப்பி சரிகட்டிடுவா, அப்புறம் ஐ.நா. சபை பாங்கி (பான்}கீ}மூன்) நம்பியார அனுப்புவான்.. உலக நாடுகள் இலங்கையில் இன படுகொலை, அநியாயம்,அக்கிரமம் அப்படினு கத்திக்கிட்டே இருக்கும். நாங்கள் அப்பாவி மக்கனை கொன்னுக்கினே இருப்போம்.
டொங்கிரி:ஒபாமா போர் நிறுத்தம் என்று குரல் கொடுத்திருக்காரே!
ராஜபட்சே: ஒபாமா சொன்னதுற்குப் பிறகு பல ஆயிரம்பேரை கொன்றிருகிறோம். நீங்க என்னடானா ஒபாமா அது இதுனு பேசிகிட்டு இருக்கிங்கே.
டொங்கிரி:உங்ககிட்ட ஹிட்லரே தோத்துடுவாரு போல,
ராஜபட்சே: ஹிட்லர் இப்பொழுது இருந்தார்னா என்னை குருவா ஏத்துக்குவாரு...
டொங்கிரி: கொஞ்சம் விளக்கமா சொல்லமுடியுமா?
ராஜபட்சே: உலகமே தடை செய்யப்பட்டுள்ள இரசாயன கொத்து குண்டுகளை போட்டு கொத்து கொத்தாக கொல்வோம், உணவுக்காக வரிசையில் காத்துக்கிடக்கும் குழந்தைகலை குறி பார்த்து சுடுவோம், கொலையும் குத்துயுரும்மாக கிடக்கும் மக்களுக்கு மருந்து சப்பளைகளை தடைசெய்வோம்.
தமிழ் யுவதிகளை எங்கள் இராணுவ வீரர்களுக்கு விருந்துபடைப்போம். தமிழ் பெண்களை சோதனை என்ற பெயரில் நிர்வாணமாக நடக்க வைப்போம், 15 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண் இருபாலரையும் அடுத்த சந்ததி (புலிகள்) உருவாகாமல் இருப்பதற்கு கொன்றுவிடுவோம், வெள்ளை வேன் என்ற நம்பர் இல்லாத வாகனத்தில் இளஞர்கள் அத்தனை பேரையும் கடத்தி கொண்டு போய் கொன்று விடுவோம், குழந்தைகளை அத்தனை பேரையும் அவர்களிடைய தாய் தந்தைகளிடமிருந்து கதற கதற பிரித்து கொண்டுபோய் பட்டினி போடுவோம், பாதுகாப்பு வளையத்துக்கு வரவழைத்து மொத்தமாக கொத்து குண்டு போட்வோம்........................
டொங்கிரி:சரி விசயத்துக்கு வருகிறேன், தனி ஈழம் கிடைக்குமா? கிடைக்காதா?
ராஜபட்சே: தனி ஈழம் நான் கொடுத்தால் கூட அங்கு வாழ தமிழ் இனம் இல்லை கூண்டோட அழித்துவிட்டேன். அப்படியே இருக்கும் கொஞ்சநஞ்சப் பேரும் உங்க ஊரு கீழ்பாக்கம் கேசுகளா அலைகிறார்கள்.
டொங்கிரி: போதும் நிறுத்து எனக்கு தலை சுற்றுகிறது, இந்த படு பாதக செயல் செய்வதற்கு உனக்கு மனசு எப்படி வந்தது நீ மனுசனா? மிருகமா?
ராஜபட்சே: எதற்கு கோவபடுகிறீர்கள் தமிழ் நாட்டில் உள்ள அரசியல் கோமாளிகளை விடவா நான் மோசமானவன்? இங்கு குவியல் குவியலாக மக்களை கொன்று போரிட்டுக்கொண்டுருக்கும் பொழுது கூட தமிழ் நாட்டில் நாங்கள் போரை நிறுத்திவிட்டோம், என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் பேட்டி கொடுக்கிறார்கள்.
அப்பொழுதுகூட என் தம்பி ங்கோத்தா பய (குரங்கு பய) நாங்கள் போரை நிறுத்தவில்லை என்று தகுந்த ஆதாரத்துடன் வெளி நாட்டு தொலைகாட்சிக்கு பேட்டி கொடுக்குறார். அதற்கு பிறகும் ஈவு இரக்கம் இல்லாமல் மழை நின்றுவிட்டது, தூவானம் விடவில்லை என்றும், இலங்கை பிரச்சனை தேர்தலில் எங்கள் வெற்றியை பாதிகாது என்றும், இலங்கைப் பிரச்சனை முடிந்துபோனப் பிரச்சனை என்றும் நா கூசாமல் நெஞ்சில் ஈரம் இல்லாமல் சொல்கிறார்களே இவர்களைவிடவா நான் மேசமானவன். இன்னொன்றும் கூறுகிறேன் மீண்டும் எங்கள் ஆத்தாதான் ஆட்சியைபிடிப்பார்.
டொங்கிரி: எப்படி?
ராஜபட்சே: காசுக்காக எதையும் சொய்வார்கள் தமிழர்கள். காசு தேர்தலில் விளையாடிவிட்டது.தமிழனுக்கு விரோதி தமிழன் தான் என்பதை இப்பொழுதாவது புரியுதா?
அட சாமீ மயக்கமே வருதுடா.

Wednesday, May 13, 2009
தமிழரின் மனதில் நீங்காத இடம் பிடித்த கலைஞர்

நல்ல நேரத்தில எடுக்கப்படும் தவறான முடிவும், தவறான நேரத்தில்
எடுக்கப்படும் சரியான முடுவும், பாதகமான விளைவை ஏற்படுத்தும்
முடுவு எடுப்பதில் காலம் சரியான பங்கு வகிக்கிறது.
கலைஞர் அவர்களே நீங்கள் எடுத்த தவறான முடிவால் இன்று இலங்கையில் நம்முடைய சகோதர சகோதிரிகள் மற்றும் தாய்மார்கள் குழந்தைகள் நமது இனம் பூண்டோடு அழிக்கப்பட்டு வருகிறது. நீங்கள் மட்டும் சரியான முடிவு எடுத்திருந்தால் நமது இனம் பாதுகாக்கப்பட்டிருக்கும், நமது இனம் தலை நிமிர்ந்து நடைபோட்டிருக்கும். பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்! குடும்ப உறவு சிக்கலில் மாட்டிக்கொண்டு சுயநலவாதியின் மொத்த உருவமாக காட்சியளிக்காறீர்கள். கலைஞர் அவர்களே நாங்கள் உங்களை சிங்கம் என்று நினைத்தோம். சிங்கம் வயதானாலும் சிங்கமாகத்தான் இருக்கும், ஆனால் நீங்கள் நரியாக மாறிவிட்டீர்கள்.
உங்களுடைய அபரிதமான ஞாபக சத்தியினாலும் புத்தி சாதுரியத்தினாலும், முன்பு எப்பொழுதோ ஜெயலலிதா இலங்கையை பற்றி கூறிய வார்த்தைகளை திரும்பத் திரும்ப சொல்லி அதி புத்திசாலி என்று காட்டிக்கொண்டியிருக்கிறீர்கள்.
ஜெயலலிதா தனி ஈழம் தான் தீர்வு என கூறிய வார்த்தைகளை நாங்கள் முழுவதும் நம்பவில்லை, ஆனாலும் அதை சரியான நேரத்தில் எடுத்த சரியான முடிவாக நினைக்கின்றோம்.அந்த வார்த்தை உலகத் தமிழர்கள் நெஞ்சில் பாலை வார்த்திருக்கிறது.
ஒரு ரூபாய்க்கு 1கிலோ அரிசி, இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி ஏழை எளிய குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச அடுப்பு, பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மன் நினைவு கோட்டை, திருவள்ளுவருக்கு குமரியில் 133 அடி சிலை, சென்னை மாநகரில் வள்ளுவர் கோட்டம்,சென்னைக் கடற்கரையில் தமிழ்ச் சான்றோர் சிலைகள்,கொல்லிமலையில் வல்வில்ஓரிக்குச் சிலை, தமிழ் தாத்தா உ.வே.சா நினைவில்லம், இப்படி உங்கள் சாதனைகளை அடுக்கிக்கொண்டே பேகலாம். நாங்கள் பெருமைப்படுகிறோம். இதையெல்லாம் ஜெயலலிதாவிடம் எதிர்பாக்க முடியாது.
ஜெயலலிதாவின் கடந்த கால அரசியலை பார்க்கும்பொழது தமிழக மக்களுக்கு நம்பிக்கை வர மறுக்கிறது. ஆனால் உங்களிடம் நம்பிக்கை வைத்தோம். அற்ப அரசியல் ஆதாயத்துக்காக இலங்கை விசயத்தில் கண்டும் காணாமல் இருந்துவிட்டீர்கள்.
அந்த கருணா காட்டிக்கொடுத்தார், இந்த கருணா (நிதி) கண்டும் காணாமல் இருந்துவிட்டார் என்ற அவபெயரை தமிழ் இனம் உள்ளவரை மறக்காது.
கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேன் . அதில் நீங்கள் ஏறி பயணம் செய்யலாம் என்று உங்கள் டி.வி.யில் வேளை தவறாமல் கூவிய போதே நாங்கள் விழித்திருக்க வேண்டும்......எம்மினம் வேதனையில் துடித்து, படகேறி வரும்போது தாயை இழந்து, குழந்தையை பறிகொடுத்து கடலில் தூக்கி வீசி விட்டு கேவலம் இந்த உயிரைக் கையில் பிடித்து கரை சேர்ந்ததே. அப்போதும் நீங்கள் வெறும் கட்டுமரக் கதையைத் தானே டி.வி.யில் போட்டீர்கள். அப்போதும் மானாட மயிலாட போட்டீர்கள்.. செய்தியில் போர் நின்றது என்று புளுகினீர்கள்.
மொத்தத்தில் நீங்கள் இதயம் மரத்த வெறும் மரம் என்று நிரூபித்து விட்டீர்கள். எப்படி இருப்பினும் இனி உலகத் தமிழர்கள் மனத்தில் நீங்காத இடம் பிடித்து விட்டீர்கள். ஆம்....
தமிழினத் தலைவராக அல்ல... துரோகியாக....
Tuesday, May 12, 2009
என் அருமை வாக்காள பெருமக்களே......
வருகின்ற 13.05.2009 அன்று நடைபெறும் பாராளுமன்ற தேர்தல்மிக முக்கியமான தேர்தல் தமிழக மக்களின் தன்மான தேர்தல், தமிழ் இன விரோத கட்சிகளை (தி.மு.க, காங்கிரஸ்)அடையாளம் காட்டவேண்டிய தேர்தல். நாள்தோறும் ஆயிரக்கனக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதும் பல ஆயாரம் பேர் சொல்லொன்னா துயரம் அடைகின்றனர் அதற்கு காரணமான காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் பணத்தை நம்பி தேர்தலை எதிர்கொள்கிறது.
தமிழக மக்கள் பணத்தை கொடுத்து காரியத்தை சாதித்துக்கொள்ளநினைக்கும் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளை 40 தொகுதிகளையும் தோற்கடித்து, தமிழர்கள் தனமானம் உள்ளவர்கள் மற்றும் உணர்ச்சிஉள்ளவர்கள் என்பதை காட்ட வேண்டிய தக்க தருணம்

Friday, May 8, 2009
இலங்கையில் தொடரும் பட்டினிச் சாவுகள்
இலங்கை வன்னி போர்ப்பகுதியில் பாதுகாப்பு மண்டலத்துக்குள் வசிக்கும் மக்களுக்கு போதிய உணவு கிடைக்காததால், பட்டினிச் சாவுகள் அதிகரித்திருப்பதாக புலிகள் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கஞ்சிக்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும், உணவுப் பொருள்கள் விநியோகிப்பதற்கான அறிகுறிகளே தெரியவில்லை எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே முள்ளிவாய்க்கால் பகுதியில் இலங்கை ராணுவத்தினர் வான் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.முள்ளிவாய்க்கால் மருத்துவமனை தற்போது வேறு இடத்தில் செயல்பட்டு வருவதாகவும், அங்கு சிகிச்சை பெற்று வந்த 51 பேரில் 18 பேர் இறந்துவிட்டதாகவும் அந்தச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைவு ஏற்பட்டிருப்பதால், நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)