Saturday, December 26, 2009

ஹெல்மெட் ஒரு கேலிக்கூத்து.

 தலைக்கவசம் உயிர் கவசம் என்றால் மிகையாகாது. தலைகவசம் உயிர் கவசம் இதில் மாற்றுக் கருத்து இருக்க இடமில்லை. ஆனால் ஹெல்மெட்டை வைத்து கேலிகூத்து பன்றதைதான் தாங்க முடியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தலைகவசம் கட்டாயம் அணிய வேண்டும், மற்றும் பின்புறம் உட்கார்ந்து செல்பவரும் தலைகவசம் அணியவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதற்கு குறுகிய கால கெடுவும் நிர்ணயிக்கப்பட்டது. இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் விழுந்தடித்துக்கொண்டு தலைகவசம் வாங்கினார்கள். ஹெல்மெட் வாங்கிய பிறகு  தலைகவசம் அணிய கட்டாயப் படுத்தவில்லை . கட்டாய ஹெல்மெட் போடவேண்டும் என்று ஏன் உத்தரவு போட்டார்கள். பின்பு ஏன் அவற்றை நடைமுறைப்படுத்தவில்லை என்று யாருக்கும் புரியவில்லை. அது உத்தரவு போட்ட தமிழக அரசுக்கும், ஹெல்மெட்டை விற்று தீர்த்த ஹெல்மெட் கமபெனிகளுக்குத்தான் வெளிச்சம்.

       பிறகு திடீரென்று ஒருநாள்  கோவை காவல் ஆணையர் புது உத்தரவு பிறப்பித்தார் 10-12-09 முதல் அனைவரும் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும். காரில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும்.  செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டினால் வண்டி பறிமுதல் செய்யப்படும் மற்றும் அபராதம் வசூலிக்கப்படும் என்று உத்தரவிட்டார். அதன்படி கடந்த 10 நாட்களுக்குள் ஹெல்மெட் அணியாதவர்களிடமிருந்து ரூ.4 லட்சத்துக்கு மேல் அபராதமாக வசூலிக்கப்பட்டது.  வழக்கம்போல் எஸ்ஐ அமுதா மற்றும் போலீஸôர் செல்பபுரம் சிவானந்தா  சந்திப்பில்  வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ் வழியாக வந்த இளைஞரை மடக்கி ஏன் ஹெல்மெட் அணியவில்லை அபராதம் கட்டியே ஆகவேண்டும் என்று அபராதம் வசூலிப்பதிலேயே குறியாக இருந்தனர். ஆனால் இளைஞர் ஊரை கூட்டிவிட்டார். பொது மக்களுக்கும்  காவலர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பொதுமக்களின் எதிர்பின் காரணமாக காவலர்கள் பின்வாங்கிவிட்டனர்.

        வாலிபர் ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்று கீழே உள்ள படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.



  




















 சந்துல சிந்து பாடுவதில் நம்ம அரசியல் கட்சிகளுக்கு சொல்லியாதரவேண்டும். உடனே  போஸ்டர் ஒட்டி அமர்களப்படுத்திவிட்டார்கள்.




 பதிவு நிறைவாக இருக்கவேண்டுமென்பதற்காக நம்மால் முடிந்த சில படங்கள்.

முன்னால் இருக்கிறவர்கள் ஹெல்மெட் போடவேண்டும் அவ்வளவுதானே இந்த படத்தை பாருங்கள்.



முன்புறம்  இருந்தாலும் ஹெல்மெட் போடு என்று சொல்லமுடியாது..



 வாலிபர் ஹெல்மெட் போடமுடியாத சூழ்நிலை எடுத்துக் கூறியும், அதற்காகத்தான் மருத்துவமனைக்கு செல்வதாக கூறியும், கொக்குக்கு மீன் மீது தான் கண் இருக்கும் என்பார்கள். அது போல் அபராதம் வசூலிப்பதிலேயே ஒத்தக்காலில் நின்ற போலீஸின் கடமையுணர்ச்சிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. இந்த கடமையுணர்ச்சி மற்ற விசயங்களில் காட்டினால் வழிப்பறி,  கொள்ளையை தடுக்கலாம். காவலர்களுக்கும்  ஒரு சல்யூட் அடிக்கலாம்.

Tuesday, December 8, 2009

எது வேண்டுமானாலும் நடக்கலாம்.



 21 வருடங்களுக்கு முன்பு ஏழை பாட்டி வீட்டில்




 21 வருடங்களுக்கு பின்பு வெள்ளை மாளிகையில்




                                                                                                                                                         நன்றி : நாணயம் விகடன்

Wednesday, November 11, 2009

மூன்று மணி நேர ஹீரோ..!..!..!


கோவையின் இதயப் பகுதியான டவுண்ஹால், ஒப்பனக்கார வீதி, உக்கடம், ஆகிய பகுதிகளில் மூன்று மணி நேரம் ஒரே அட்காசம் தான் யாராலும் ஒன்றும் பன்ன முடியவில்லை. பொது மக்கள் மத்தியில் ஒரே பீதி கலவரம். போலிஸ்காரர்களாலும் வேடிக்கை பார்க்கதான் முடிந்தது. அப்படி என்னதான் நடந்தது. மூன்று மணி நேர ஆட்டத்துக்கு முடிவு, வளர்த்த கடா மார்பில் முட்டிய கதையாக வளர்த்த எஜமானனையே முட்டி கைகளை ஒடித்து மிதித்து மருத்துவமனையில் படுக்க வைத்துவிட்டுதான் ஓய்ந்தது. கடைசியில் உங்களால் என்னை ஒன்னும் பன்னமுடியாது என்றும் நானாக பார்த்து நிறுத்தினால் உண்டு காளை மாடு தானக காந்தி பார்க் பகுதியில் நின்றுவிட்டது.  வழக்கம் போல் கடைசியில் போலிஸ் மாட்டை மடக்கி பிடித்து காலரை தூக்கிவிட்டுக்கொண்டனர்.


















Sunday, October 25, 2009

முதலில் படத்தைப் பாருங்கள் பிறகு பேசுங்கள்.




 

 

 


 







 
.
 .
 .
 .
 .
 .
 .
 .
 .
போதும்  அடுத்த படம் வேண்டாம்.



சிந்திக்கும் திறன், செயல்,  காலத்திற்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்.
மாறிக்கொண்டே இருப்பது ஒன்றுதான் மாறாமல் இருப்பவை.
இது மரம், மனிதன, விலங்குகள், இயற்க்கை அத்தனைக்கும் பொது.
கோவை மருத மலை கோயிலில் நாயும் குரங்கும் செய்யும் சேட்டைகள் வித்தியாசமாக இருந்து. திரும்பி வரும் வழியில் ஒரு பெரியவரிடம் இந்த படங்களை காட்டியது தான் தாமதம் நாயும் குரங்கும் சண்டைதானே போடும். இது என்ன காட்சி எல்லாம் கலி முத்திரிச்சி என்று வெடுக் திரும்பு சென்றுவிட்டார்.
மனிதனை விட நாங்கள் எந்தவிததிலும் குறைந்தவன் இல்லை என்று நாயும் குரங்கும் சொல்வதுபோல் இருந்தது, மேலே கண்ட காட்சி.

Friday, October 16, 2009

தமிழர்கள் கண்டிப்பாக தீபாவளி கொண்டாட வேண்டும்...ஏன்?





தமிழகத்தில் இன்று  தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வாணவேடிக்கைகள், புத்தாடைகள்,
இனிப்பு வகைகள் போன்றவற்றிற்கு பஞ்சமில்லை.

தீபாவளி தமிழர்கள் பண்டிகையா, நரகாசூரன் இருந்தானா,
தீபாவளி கட்டுக்கதை போன்று வலைப்பதிவுகளில் நண்பர்கள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அது போகட்டும். தீபாவளியை தமிழர்களாகிய நாம் ஏன் கொண்டாட வேண்டும்
என்பதை ரூம் போட்டு யோசித்ததில் கிடைத்த பதில் இதுதான். அதாவது,


ராஜபட்ச மனம் மாறி 3 லட்ச தமிழ் மக்களையும்
அவரவர்களுடைய சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி
தீபாவளிக்கு பரிசும் கொடுத்துக் கொடுத்து கைகள் சிவக்க நின்று கொண்டிருக்கிறார் என்று அங்கு காலியாகிவிட்ட முகாமுக்கு போடப்பட்டுள்ள வாட்ச்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.

இங்கே முல்லைப் பெரியார் அணையில் உச்சநீதிமன்ற
தீர்ப்பில் கூறப்பட்டுள்ள 142 அடிக்கும் மேலாக 160 அடி
தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்றும், புதிய அணை
தேவையில்லை என்றும் கேரள முதல் மந்திரி அச்சுதானந் கூறிவிட்டார்.

சக இந்தியரின் மனம் நோகும்படி, அவர்கள் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று
இனி சொல்ல மாட்டோம் என்றும் காவிரியில்  எங்களுக்கு குடிக்கத் தண்ணி இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டுக்கு கொடுப்போம் என்று கர்நாடக முதல் அமைச்சர் எடியூரப்பா சொல்லிபுட்டார்.

பாலாறு மட்டுமல்ல, மோர், தயிர், வெண்ணெய், நெய், டால்டா, மசகு, குரூடு என்று எந்த ஆறும் எங்களுக்கு வேண்டாம். அதில் அணை மட்டுமல்ல
அதில் நின்று சின்ன கோவணம் கூட கட்டமாட்டோம் என்று
ஆந்திரா முதல்வர் ரோசய்யா ரோஷத்துடன் சொல்லிவிட்டார். எல்லாம் தமிழருக்காக....கலைஞருக்காக.

 டி.ஆர்.பாலு, திருமா, கனிமொழி அன்ட் கோ சொன்ன தகவலைக் கேட்டு
இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் அழிந்து போன/ அழிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழருக்காய் கண்ணீர் விட்டு கதறி மிகவும் சோகமாக உள்ளனர் .

ஆந்திரா, கர்நாடகா, கேரளா எனறு எல்லா மாநில மக்களும் தமிழருக்கு பேருதவிகள் நெறய்யயயயய செய்யத் துவங்கிவிட்டார்கள்.

அதனால் நாமும் அவர்களது பண்டிகையை வெட்கமில்லாமல் கொண்டாடுவோம்.

கொள்ளையோ கொள்ளை!.....



தீபாவளி, பொங்கல் மற்றும் முக்கியமான பண்டிகை நாட்களில்
வியாபாரிகள் லாபம் அதிகம் சம்பாதிக்கும்பொருட்டு
பொருகளை அதிக லாபதில் விற்று அதிக லாபம் கொள்ளை அடிப்பார்கள். ஆனால் அரசாங்கம் அவ்வாறு சொய்யுமா? அரசாங்கம் பகல் கொள்ளை அடிக்கிறது. தீபாவளி பண்டிகையின் போது அனைவரும் அவரவர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். அதனால் பஸ்களில்  அளவுகதிகமாக கூட்டம் அலைமோதுகிறது. அரசாங்க பஸ்களில் எக்ஸபிஸ் என்றும், பாயிண்ட்  டு பாயிண்ட என்று  போர்டை மாட்டிக்கொண்டு அதிக கட்டணத்தை வசூலிக்கறது. கீழே உள்ள அட்டவணையை பாருங்கள் திருத்தப்பட்ட கட்டண விவரம்.

இது பகல் கொள்ளை இல்லையா? பக்கத்து மாநிலமான கேரளாவில் இது நடக்குமா? மக்கள் ரோட்டில் இறங்கி போராட ஆரம்பித்துவிடுவார்கள். மக்கள் சக்திக்கு அரசாங்கம் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆனால் தமிழகத்தில் என்ன நடக்கிறது, நமக்கேன் வம்பு என்று  கேட்குற காசை குடுத்துவிட்டு ஊர் போய் சேர்வதிலேயே  கவனமாக இருக்கிறார்கள். மக்களுடைய மறதியும், சுயநலமும், அரசியல்வாதிகளுக்கு வசதியாகப்போய்விட்டது. தமிழனுக்கு சூடு சுரனை எல்லாம் போய் சுயநலவாதியாக மாறிவிட்டான்,என்று சொல்வதை தவிற வேறு என்ன சொல்ல?

Saturday, October 10, 2009

சினிமாவும் சீரழிவும்...


ஒரு தமிழர் உலக சாதனை படைத்திருக்கிறார். இந்தியர் ஒருவருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. அதைப் பற்றி எழுதாமல் சமுதாயத்துக்கு எந்தவிதத்திலும் பயனில்லாத ஒரு விஷயம் பற்றி எழுத வேண்டிய துர்பாக்கியத்தை நினைத்து நொந்து கொள்வதைத்தவிர வேறு என்ன வழி?நல்ல விஷயம் பற்றி எழுத நாலு நாள் தள்ளிப்போகலாம். ஆனால் தவறுகள் உடனடியாகச் சுட்டிக்காட்டப்பட வேண்டும். இல்லையென்றால் தவறான முன்னுதாரணம் உருவாகிவிடும்.பத்திரிகைகள் வியாபார நோக்கத்துடன் செயல்படுகின்றன என்பதையும், சமுதாயத்துக்குப் பயனில்லாத விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து வெறும் பரபரப்பை மட்டுமே நம்பிச் செயல்படுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை. எல்லாத் துறைகளிலும் உள்ளதுபோலவே பத்திரிகைத் துறையிலும் தரக்குறைவு ஏற்பட்டிருப்பது உண்மை.சமீபத்தில் ஒரு பத்திரிகையில் புகைப்படங்களுடன் வெளியிடப்பட்ட திரையுலகப் பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட செய்தி, எந்தவிதத்திலும் சமுதாய வளர்ச்சிக்கும், மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கப் போவதில்லை என்பது தெளிவு. இப்படிச் செய்திகள் பிரசுரிக்கப்படுவது கண்டனத்துக்குரியது என்பதில் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.திரைப்பட நடிகைகளின் ஒழுக்கத்தைப் பொது விவாதமாக்குவதால் யாருக்கு என்ன லாபம்? அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கவோ, அவர்களது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவோ பத்திரிகைகளுக்கு யார் அதிகாரம் அளித்தது? பெரிய, பெரிய வண்ணப்படங்களைப் போட்டு நடிகைகளின் அங்க அவயவங்களை வெளிச்சம்போட்டுக் காட்டி, தங்களது விற்பனையை அதிகரித்துக் கொள்வதுடன் பத்திரிகைகள் நிறுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, இதுபோல வரம்புமீறி விமர்சனம் செய்யும் உரிமை பத்திரிகைகளுக்குக் கிடையாது.

       அதேநேரத்தில், நடிகைகளின் படங்களை ஆபாசமாகப் போட்டு பெண்ணினத்தையே வெறும் போகப்பொருளாகக் காட்ட முயலும்போதெல்லாம் பாயாத பெண்கள் வன்கொடுமைக்கு எதிரான சட்டம், சம்பந்தப்பட்ட செய்திக்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பது விசித்திரமாக இருக்கிறது. நடிகைகள் தங்களது ஒழுக்கத்தைப் பற்றிய விமர்சனத்துக்காக அந்தப் பத்திரிகையின்மீது தனித்தனியாக அவதூறு வழக்குப் போடலாமே தவிர, பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எப்படி, ஏன், எதற்காக இந்தப் பிரச்னையில் கையாளப்பட்டிருக்கிறது என்பது புதிராக இருக்கிறது.நடிக, நடிகையர் ஒன்றுகூடி நடிகர் சங்க வளாகத்தில் நடத்திய கூட்டத்தில், பத்திரிகையாளர் பற்றிய விமர்சனங்களும், செவிகூசும் வார்த்தைகளால் சில பிரபல நடிக, நடிகையர் நடத்திய சொல்அபிஷேகங்களும் அவரவர் தரத்தையும் கலையுலகத்தின் தராதரத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. நா கூசாமல் பேசும் இவர்களுக்கு, நாசூக்கான விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ளும் சக்திகூடக் கிடையாது என்பது ஊரறிந்த உண்மை.பிராந்திக்கும், 

    பிரியாணிக்கும், பணத்துக்கும் விலைபோகிறவர்கள்தான் பத்திரிகையாளர்கள் என்று பொத்தாம்பொதுவாக நடிக, நடிகையர் விமர்சிக்கலாம் தவறில்லை. காரணம், அவர்கள் கலைச்சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள். தங்களது செய்திகளும், படங்களும் பிரசுரமாவதற்காக இவர்கள் தயாரிப்பாளர்களின் செலவில் மேலே குறிப்பிட்ட தானதர்மங்களை அல்லது கையூட்டல்களைக் கொடுக்கலாம் தவறில்லை. காரணம் அவர்கள் கலைச்சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள். இது ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை என்று யாரும் கருதலாகாது. காரணம் அவர்கள் கலைச்சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள்.கலையுலகம், கலையுலகம் என்று கூக்குரலிடும் இன்றைய கலையுலகத்தின் சமுதாயப் பங்களிப்புதான் என்ன? ஒட்டுமொத்த தமிழ் சினிமாவால் ஆண்டொன்றுக்குச் செய்யப்படும் மொத்த விற்றுமுதல் (பன்ழ்ய்ர்ஸ்ங்ழ்) எவ்வளவு தெரியுமா? சுமார் நூறோ, இருநூறோ கோடிகள். அதுவும் பெரிய படங்கள் வந்தால் மட்டுமே. திருப்பூரிலும் சிவகாசியிலும் இருக்கும் பல தனியார் நிறுவனங்களின் வருட வருமானம்தான் சினிமாத்துறையின் ஒட்டுமொத்த விற்றுமுதல்!ஆனால் ஊடகங்களில் கலைத்துறையினருக்கு அளிக்கப்படும் முக்கியத்துவமோ பல மடங்கு அதிகம். இவர்களது கலைச்சேவையால் மொழி வளர்ச்சி அடைகிறதா? நமது கலாசாரம் மேன்மையடைகிறதா? சமுதாயப் பிரச்னைகள் முன்னுரிமை பெறுகின்றனவா? நாளைய தலைமுறைக்கு நல்ல பல கருத்துகளை முன்வைத்துக் கடமையாற்றுகிறதா? வரிவிலக்குக்காக தமிழில் பெயரை வைத்துவிட்டு தமிழையும் தமிழனின் கலாசாரத்தையும் சீரழிப்பதைத்தவிர இவர்களது கலைச்சேவைதான் என்ன என்று யாராவது விளக்கினால் நலம்.அரிதாரம் பூசும் நடிகர்கள், தங்களது துறையில் ஈடுபட்டிருக்கும் கடைநிலை ஊழியர்களுக்காகவும், ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்களுக்காகவும் எந்தவிதத்தில் எந்த அளவுக்கு உதவுகிறார்கள் என்பதை அவர்களது மனசாட்சியே கூறும். இவர்கள் மற்றவர்களைக் குறை கூறுவதற்கு முன்னால் தங்களது முகத்தைத் தாங்களே ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக்கொள்வது நலம். நடிகரானாலும் நடிகையானாலும் இவர்களது சாதனைகளின் அடிப்படை எழுத்தாளர்களின் கற்பனாசக்தியும் பேனா வலிமையும்தான். நல்ல கதை அமையாத திரைப்படங்கள் நடித்தது யாராக இருந்தாலும் ஓடுவதில்லை என்பதுதான் திரையுலக சரித்திரம் கூறும் உண்மை.


       பத்திரிகைகள் தரம் தாழ்ந்து செய்திகளை வெளியிடுவது கண்டனத்துக்குரியது. நடிக, நடிகையர் வரம்புமீறி ஒட்டுமொத்தப் பத்திரிகையாளர்களையும் கொச்சைப்படுத்துவதும் கண்டனத்துக்குரியது. துணிவிருந்தால் இருசாராருமே மற்றவரைச் சாராமல் வாழட்டுமே, அதற்குத் தயாரா? இவர்கள் பிராந்தி, பிரியாணி, பணம் கொடுக்கவும் வேண்டாம். அவர்கள் வாங்கவும் வேண்டாம். செய்வார்களா?பத்திரிகையில் வெளிவரும் செய்தி தவறானால் அவதூறு வழக்குத் தொடரலாமே தவிர, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வது எப்படி நியாயம்? ஒரு பத்திரிகைச் செய்திக்காக செய்தி ஆசிரியரை எப்படிக் கைது செய்யலாம்; அதுவும் பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில்? ஒரு தவறான முன்னுதாரணம் உருவாக்கப்பட்டிருக்கிறதே அது ஏன்? எந்தவிதத்திலும் சமுதாயத்துக்குப் பயனில்லாத ஒரு விஷயம் விவாதப் பொருளாகியிருப்பது வேதனையிலும் வேதனை!
 நன்றி : தினமணி

Saturday, October 3, 2009

மகாத்தமாவும் மாமிசமும்

 

 
கோவையில்  (2-10-09) விற்பனைக்கு திறக்கப்பட்டுள்ள கடைகள் ...



 காந்தி பிறந்த நாளை காந்தி ஜெயந்தியாக  (அக்டோபர் 2) ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  காந்திய கொள்கைக்கும்  அவரது புகழுக்கும் மரியாதை தரும்பொருட்டு அக்டோபர் 2 தேதி  மத்திய மாநில அரசுகள் விடுமுறையாக  அறிவிக்கப்பட்டதோடு மாமிசம், மது போன்ற வஸ்துகளை அகடோபர் 2 -ல் நாடெங்கிலும் விற்பனைக்கு  தடை செய்யப்பட்டுள்ளது.

         மகாத்மா காந்தியின் கொள்கையில் ஆழமான நம்பிக்கை குறைந்த  காரணத்தால் இன்று நாட்டின் பல பகுதிகளில் தெருவெங்கும் மது கடைகள் திறந்து  மகாத்மாவுக்கு நாம் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறோம். வருடத்தின் ஒரு நாள் அக்டோபர் 2 ம்தேதி மட்டுமாவது மது, மாமிச கடைகள்  மூடிவிட்டு காந்திக்கு மரியாதை செய்யலாமே!?...  

Friday, October 2, 2009

காந்தி ஜெயந்தி






கோவையில்  (2-10-09) விற்பனைக்கு திறக்கப்பட்டுள்ள கடைகள் ...

 காந்தி பிறந்த நாளை காந்தி ஜெயந்தியாக  (அக்டோபர் 2) ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  காந்திய கொள்கைக்கும்  அவரது புகழுக்கும் மரியாதை தரும்பொருட்டு அக்டோபர் 2 தேதி  மத்திய மாநில அரசுகள் விடுமுறையாக  அறிவிக்கப்பட்டதோடு மாமிசம், மது போன்ற வஸ்துகளை அகடோபர் 2 -ல் நாடெங்கிலும் விற்பனைக்கு  தடை செய்யப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் கொள்கையில் ஆழமான நம்பிக்கை குறைந்த  காரணத்தால் இன்று நாட்டின் பல பகுதிகளில் தெருவெங்கும் மது கடைகள் திறந்து  மகாத்மாவுக்கு நாம் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறோம். வருடத்தின் ஒரு நாள் அக்டோபர் 2 ம்தேதி மட்டுமாவது மது, மாமிச கடைகள்  மூடிவிட்டு காந்திக்கு மரியாதை செய்யலாமே!?...   தேவைகளை குறைத்து எளிமையாக வாழவேண்டும் என்று கூறினார். அது ஒர்  உயர்ந்த  வாழ்க்கை முறை. காந்திய கொள்கைகளிலிருந்து விலகிச் செல்வதால்தான்  இன்று நாடாகட்டும் தனி மனிதனாகட்டும் பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.

Friday, September 25, 2009

நவராத்திரி & ஆயுத பூஜை




    நவராத்திரி திருவிழா ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 9 நாட்களில்  நடைபெறும்.   நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு. ஒன்பது இரவுகள் தொடர்ந்து நடைபெறுவதால், இதற்கு நவராதóதிரி என்று அழைக்கப்படுகிறது.    துர்க்கா, லெஷ்மி,      சரஸ்வதி     ஆகிய    மூன்று தெய்வங்களும் ஒன்று சேர்ந்து உருவான பராசக்தியால்  மகிஷாசுரனை     வதம்     செய்வதைத்தான்       நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.
 இதில் முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையாகவும் அடுத்த மூன்று நாட்கள் லெஷ்மி பூசையாகவும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி பூசையாகவும் ஆக மொத்தம் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது.     இந்நாளில் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு வைத்து வழிபடுவார்கள்.

    சிலர் வீடுகளில்  கொலு வைப்பதற்கென்றே தனியாக படிகள் வைத்திருப்பார்கள்.  நவராத்திரி நாட்களில்.அப்படிகளில் அவரவர்கள் தகுதிக்கேற்றவாறு விதவிதமான பொம்மைகள் வைத்து வழிபடுவார்கள்.இந்த நாட்களில் துர்கா, லெஷóமி, சரஸ்வதி மூலமும் ஒன்று சேர்ந்து பராசக்தியாக கொலு வீற்றிருப்பதாக ஒரு ஐதீகம்.  ஒன்பது நாட்களும் மவுன விரதம் கடைப்பிடித்தால் உடல் உள்ளத்திற்கு நன்மை உண்டு

    வீடுகளில் கொலு வைத்திருப்பவர்கள் மாலை நேரத்தில் தினமும் ஒவ்வொரு வகையான சுண்டல்கள் அல்லது ஏதாவது ஒரு பதார்த்தங்கள் செய்து கொலுவிற்கு வைத்து வழிபட்டு பின்பு அவரவர்களுக்கு தெரிந்தவர்கள்,  அக்கம் பக்கம் குடிஇருப்பவர்கள் எல்லோரையும் அழைத்து அவர்களுக்கும் வெற்றிலை, பாக்கு, பழம், மற்றும் அவர்கள் செய்த பிரசாதங்களையும் கொடுத்து மகிழ்வார்கள்.

    சரஸ்வதி பூஜை அன்று அனைத்து அலுவலகங்கள், கடைகள் மற்ற எல்லோரும் சரஸ்வதிக்கு பூஜை செய்து வழிபடுவார்கள்.

    கடைசி நாளான விஜய தசமி அன்று பராசக்தியானவள்   மகிஷாசுரனை  வதம் செய்வதாக ஐதீகம். இதையே நாம் நவராத்திரியாக கொண்டாடி மகிழ்கிறோம்.

மேலே கூறியவைகளை அனைவரும் கொண்டாடுவார்கள்  என்று சொல்லமுடியாது. ஆனால் விஜய தசமிக்கு  அடுத்த நாள்  ஆயுத பூஜை வெகு சிறப்பாக பட்டி தொட்டிஅனைத்து இடங்களிலும் கொண்டாடப்படும்.உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை .ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.

விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல் நன்று.


Monday, September 21, 2009

இந்த கொடுமையை பாரீர்!?....!?


 நினைத்தது நடந்தே விட்டது.


 கோவையிலிருந்து 30 மைல்கல் தொலைவில்
 அன்னூர் - க்கு முன்பாக   இன்று (21-9-2009)காலை 11 மணி வாக்கில் 250 ஆடுகள்  தனியாருக்கு சொந்தமான இரண்டு சக்கர வாகனத்துத்துக்கு
 தேவைப்படும் சங்கிலி (CHAIN) தயாரிக்கும் தொழிற்ச்சாலையிலிருந்து
வெளியாகும் சுத்திகர்க்கப்படாத தண்ணீரைக் குடித்த 250ம் அதிகமான
ஆடுகள் செத்துக்கிடக்கினறன. தொழிற்ச்சாலையிலிருந்து சுத்திகரிக்கபடாமல் தண்ணீரை வெளியில் வெளியில் அனுப்பியது  தவறு. காலை 11 மணிக்கு நடந்த சம்பவம் மாலை வரை தொழிற்ச்சாலைக்கு சம்பந்தப்பட்டவர்களோ
அதிகாரிகள் வர்கமோ எந்த விக நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
 இன்று ஆடுகளுக்கு நடந்தது நாளை மனிதர்களுக்கும் இது நடக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள சாய மற்றும் தொழிற்ச்சாலைக் கழிவுகள் அனைத்தும் சுத்திகரிக்படாமலே நொய்யல், காவிரி ஆகிய ஆறுகளில் கலக்கப்படுகின்றன.
 நீதி மன்றம்  தலையிட்டும் பிரச்சனை முடியவில்லை.   

ஆடுகளுக்கு ஏற்பட்ட கதி மனிதனுக்கு ஏற்பட்ட பிறகு அரசாங்கமும் அதிகார வர்கமும்  கண்களை திறக்குமோ? என்னவோ?

Friday, September 18, 2009

கண்காட்சிகளில் மட்டுமே இனி பார்க்க முடியும்.


 
 
 
 
 
அவசர உலகம் எதிலும் வேகம் வேகம். வாழ்க்கை எந்திரமயமாகிவிட்டது.
    
     அரிதாகிபோன மாட்டு வண்டிப் பயணம், குதிரை வண்டிப் பயணம், சினிமாவில்   மட்டுமே இப்பொழுது சாத்தியப்படுகிறது.

 கோவையில் ஒரு கான்வென்ட ஸ்கூல் எதிரில்  குழந்தைகளை ஏற்றிக்கொண்டு
பயணத்திற்கு  தயாராக இருக்கும் (ஒரு அரிய கண்கொள்ளா காட்சி) குதிரை வண்டி.

அடுத்த தலைமுறையினருக்கு குதிரை, மாட்டு வண்டிகளை கண்காட்சிகளில் மட்டுமே  காட்டவேண்டியது இருக்கும்.

Saturday, September 12, 2009

ஆனந்தம்..

உன்னதமான அனுபவம்.

கோவை வேளாண்மைதுறை பல்கழைக்கழகத்துக்கு  தமிழ் நாட்டில்
முக்கியமான இடம் உண்டு. இங்கு படித்து பல்வேறு துறைகளிலும், பல்வேறு இடங்களிலும் பணி புரிந்துவிட்டு  ஓய்வு பெற்று தாத்தாவாகிவிட்ட முன்னால் மாணவர்களின் சந்துப்பு இன்று (12-09-2009) கோவை வேளான்மை பல்கழைக்கழகத்தில்  நடந்தது. நீண்ட நெடிய நாட்களுக்குப் பிறகு சந்தித்துக்கொண்டவரக்ள் ஒருவரை ஒருவர் ஆர தழுவிக்கொண்டனர்.
பேரன் பேத்தி சொத்து சுகம் அனைத்தையும் அனுபவித்துவிட்டு வந்த தாத்தாக்களுக்கு அங்கு கிடைக்காத ஆனந்தம் பழைய நண்பர்களை பார்த்தபொழுது அடைந்த ஆனந்தம் பார்பதற்கு பரவசமாக இருந்தது. மற்ற குடும்ப உறவுகளைக்காட்டிலும், நண்பன் என்ற உறவு மேண்மையானது.

Thursday, September 3, 2009

அதிசியம் ஆனால் உண்மை.









அன்பின் வெளிப்பாடு

கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்று பகவத்கீதையில் கிருஷ்ணபரமாத்மா ஓர் இடத்தில் அழகாக கூறுவார். பிரதிபலனை எதிர்பார்க்காமல் கடமையை செய்தால் உரிய நேரத்தில் உரிய பலன் கிடைக்கும் என்பதை புலவர் வெங்கட்டராமன் விசயத்தில் அதிசியம் நடந்துள்ளது.

அரசு உதவி பெறும் செங்குந்தர் மகாஜன மேல்நிலைப் பள்ளி குருசாமிப்பாளையத்தில் தமிழாசிரியராகப் 1954}ம் முதல் 1985 ஆண்டு வரை பணிபுரிந்தார். ராசிபுரத்திலிந்து திருச்சொங்கோடு செல்லும் வழியில் இருக்கிறது குருசாமிப்பாளையம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு செங்குந்தர் மகாஜன மேல்நிலைப் பள்ளியில் முன்னால் மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.
புலவர் வெங்கட்டராமனிடம் படித்த முன்னால் மாணவர்கள் இன்று பலர் தொழில் அதிபராகவும், பலர் அரசு மற்றும் தனியார் நிறுவனóகளில் உயர்ந்த பதவிகளில் வேலைசொய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் தமிழாசிரியர் வெங்ட்ராமன் மட்டும் ஏழ்மை நிலையில் சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இதைப் பார்த்த முன்னால் மாணவர்கள் மனக்கவலை அடைந்தனர்.

நாங்க இந்தளவுக்கு உயர்ந்த நிலையில் இருப்பதற்கு எங்க தமிழய்யாதான் காரணம். பாடத்தை மட்டும் சொல்லிக்கொடுக்கவில்லை. வாழ்கையையும், மற்றும், பல நல்ல விசயங்களையும் சொல்லிக்கொடுத்தார். இன்றளவும் எங்களுக்கு வாழ்கைக்கு உபயோகமாக இருக்கிறது. அப்படி எங்கள் வாழ்கையை உயர்த்திய தமிழய்யா வாடகை வீட்டில் இருக்கக் கூடாது, என்று முடிவு சொய்து புது வீடு ஒன்று 10 லட்ச ரூபாய் செலவில் புது வீடு ஒன்று கட்டி கொடுத்துள்ளனர்.

புதிய வீட்டிற்கு குரு நிவாஸ் என்ற பெயர் சூட்டி சாவி கொடுக்கும் நிகழ்ச்சி, கிரஹப்பிரவேசம் செப்டம்பர் ( 4 - 9 - 2009 )ஆம் தேதி நடக்கிறது.

குரு சிஷ்யன் உறவுக்கு முன் உதாரணமாக உள்ளனர் இந்த முன்னால் மாணவர்கள். குரு சிஷ்யன் உறவு என்று சொல்லும்பொழுது இரண்டு பேருமே உயர்ந்து நிற்கின்றனர். முன்னால் மாணவர்கள் தமிழய்யாவைப்பத்தி பேசும் பொழுது, தமிழய்யா கற்றுக்கொடுத்த வாழ்கையைப் பற்றிய நல்ல விசயங்களுக்கு முன்னால் இந்த 10 லட்ச பணமதிப்பெல்லாம் ரெம்ப சாதாரணம் என்று அடக்கமாக கூறுகின்றனர். ஆசிரியர் மாணவர்களைப்பற்றி பேசும் பொழுது, என்ன சொல்றதுன்னே தெரியலைங்க.. இப்படியும் மாணவர்கள் இருப்பார்களா! இவங்க எல்லோரும் என்னோட மாணவர்கள்னு சொல்றதைவிட, நான் அங்களோட ஆசிரியர்னு சொல்லிக்கிறதுலதான் எனக்குப் பெருமை! நன்னூல் - ங்கிற இலக்கண நூல்ல, நல்ல மாணவர்களுக்கு சில இலக்கணம் சொல்லி இருக்காங்க. நன்னூலை இப்ப எழுதி இருந்தா ... என்னுடைய மாணவர்களைத்தான் நல்ல மாணவர்கள் என்று உதாரணம் காட்டி இருப்பார்கள். என்று சொல்லும்போதே புலவருக்கு ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

எழுதறிவு சொல்லிக்கொடுத்தவன் இறைவனுக்கு ஒப்பானவர் என்பதை புலவர் வெங்கடராமன் நிரூபித்துவிட்டார்.

வாழ்க பல்லாண்டு வாழ்த்துவோம்.