Saturday, October 3, 2009

மகாத்தமாவும் மாமிசமும்

 

 
கோவையில்  (2-10-09) விற்பனைக்கு திறக்கப்பட்டுள்ள கடைகள் ...



 காந்தி பிறந்த நாளை காந்தி ஜெயந்தியாக  (அக்டோபர் 2) ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.  காந்திய கொள்கைக்கும்  அவரது புகழுக்கும் மரியாதை தரும்பொருட்டு அக்டோபர் 2 தேதி  மத்திய மாநில அரசுகள் விடுமுறையாக  அறிவிக்கப்பட்டதோடு மாமிசம், மது போன்ற வஸ்துகளை அகடோபர் 2 -ல் நாடெங்கிலும் விற்பனைக்கு  தடை செய்யப்பட்டுள்ளது.

         மகாத்மா காந்தியின் கொள்கையில் ஆழமான நம்பிக்கை குறைந்த  காரணத்தால் இன்று நாட்டின் பல பகுதிகளில் தெருவெங்கும் மது கடைகள் திறந்து  மகாத்மாவுக்கு நாம் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறோம். வருடத்தின் ஒரு நாள் அக்டோபர் 2 ம்தேதி மட்டுமாவது மது, மாமிச கடைகள்  மூடிவிட்டு காந்திக்கு மரியாதை செய்யலாமே!?...  

1 comment:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இதனால் காந்திக்கு புதிதாக மரியாதை வருமென நான் நம்பவில்லை. காரணம் இலங்கையில் பல வருடங்களாக பௌர்ணமி தினமன்று மதுக்கடைகள்; மாமிசக்கடைகள் பூட்டு அத்துடன் எல்லோரும் விகாரைக்குச் செல்ல அரச விடுமுறை வேறு; அதாவது புத்த குருமாரை வசப்படுத்த பௌத்த நாடான
இலங்கை அரசு எடுத்த நடவடிக்கை..
ஆனால் பெருங்குடி மக்கள்; மாமிசம் உண்போர் முதல் நாள் ஒன்றுக்கு இரண்டு போத்தலை வாங்கி
வீட்டுக்குக் கொண்டு சென்று ; விடுமுறையானதால் நன்கு இறைச்சியைச் சமைத்து குடித்து கும்மாளமடிப்பதை நான் கண்ணால் கண்டுள்ளேன்.
பல சராயத்தவறணை; இறைச்சிக் கடை உரிமையாளர்; பௌர்ணமி விடுமுறைக்கு முதல் நாள்; தங்களுக்கு
3 மடங்கு வியாபாரம் நடப்பதாகக் கூறக் கேட்டுள்ளேன்.
ஆகவே இவை சட்டம் போட்டு தடுக்கும் விடயமல்ல!
அத்துடன் இறைச்சி விற்கக் கூடாது; மீன் விற்கலாமா?
தொலைக்காட்டியில் திரை நடிகர்கள்; நடிகைகளை வைத்துக் காந்தி ஜயந்தி கொண்டாடுவதென
அவர்கள் தங்கள் பிரதாபங்களைப் பாடுவது;
உண்மையில் காந்தி பற்றி கூற இன்று தகுதியுள்ள திரையுலகினர் யார்?
டி.கே. பட்டம்மாள் வாழ்ந்த காலத்திலோ? எம்.எஸ்.சுப்புலக்சுமி அம்மா வாழ்ந்த காலத்திலோ
அவர்களை வைத்து காந்தியார் பற்றி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தியதாக ஞாபகம்
இல்லை.
சாரயக்கடை;இறைச்சிக்கடை மூடுமுன்...;காந்தி ஜயந்தி அன்று; தொலைக்காட்சியையும்; திரைப்பட
மாளிகையையும் மூடுங்கள்.
முடியுமா?
ஆகவே முதல் நம் ஒவ்வொருவர் மனத்திலும் காந்தியை நிறுத்துவோம்.