கோவையில் (2-10-09) விற்பனைக்கு திறக்கப்பட்டுள்ள கடைகள் ...
காந்தி பிறந்த நாளை காந்தி ஜெயந்தியாக (அக்டோபர் 2) ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. காந்திய கொள்கைக்கும் அவரது புகழுக்கும் மரியாதை தரும்பொருட்டு அக்டோபர் 2 தேதி மத்திய மாநில அரசுகள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டதோடு மாமிசம், மது போன்ற வஸ்துகளை அகடோபர் 2 -ல் நாடெங்கிலும் விற்பனைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் கொள்கையில் ஆழமான நம்பிக்கை குறைந்த காரணத்தால் இன்று நாட்டின் பல பகுதிகளில் தெருவெங்கும் மது கடைகள் திறந்து மகாத்மாவுக்கு நாம் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கிறோம். வருடத்தின் ஒரு நாள் அக்டோபர் 2 ம்தேதி மட்டுமாவது மது, மாமிச கடைகள் மூடிவிட்டு காந்திக்கு மரியாதை செய்யலாமே!?... தேவைகளை குறைத்து எளிமையாக வாழவேண்டும் என்று கூறினார். அது ஒர் உயர்ந்த வாழ்க்கை முறை. காந்திய கொள்கைகளிலிருந்து விலகிச் செல்வதால்தான் இன்று நாடாகட்டும் தனி மனிதனாகட்டும் பல இன்னல்களை சந்திக்க வேண்டியிருக்கிறது.
6 comments:
இன்னிக்கு பள்ளி, அலுவலகங்கள் விடுமுறை அதனால் டபுள் சேல்ஸ்
முதல் படம் சூப்பர்
முதல் படம் சூப்பர்
காந்திக்கு வந்த சோதனை
நிச்சயம் வருத்தத்திற்குரியது.
காந்தியடிகள் குறித்த எனது பதிவு...
http://rajasabai.blogspot.com/2009/10/blog-post.html
மாமிசம் சாப்பிட்டால் காந்தியின் 'மாமிசம்' தவிர்த்த மற்ற கொள்கைகளைப் பின்பற்ற முடியாதா?
Post a Comment