Monday, August 24, 2009

தண்ணீர்....... தண்ணீர்.......



திருப்பூர்

தமிழ் நாட்டிலே அதிக வருவாய் ஈட்டும் நகரங்களில் முதல் நகரம் திருப்பூர். வருமான வரி அதிகமாக செலுத்தும் நகரம் திருப்பூர். வேலை வேண்டும் என்று நினைப்பவர்கள் திருப்பூர் சென்றால் பிழைத்துக்  கொள்ளலாம். வேலைக்கு ஆட்கள் தேவை என்ற போர்ட் எப்பொழும் எங்காவது ஓர் இடத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். பணப் புழக்கம் அதிகமாக உள்ள நகரம் திருப்பூர்.

        இப்படி பல சிறப்பு அம்சங்கள் இருந்தாலும், தண்ணீர் தட்டுப்பாடு, நெருக்கடியான சாலைகள். சுத்தமின்மை, என்று திருப்பூரின் மறு பக்கத்தை சொல்லிக்  கொண்டே போகலாம். திருப்பூர் பல லட்சாதிபதிகளையும், கோடீஸ்வரர்களையும் உருவாக்கிய நகரம். ஆனால் இங்கு உள்ளவர்கள் சுற்றுப்புறச் சூழல் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார்கள். இவர்களுடைய நோக்கம் பணம் பணம், வியாபாரக் கண்ணோட்டத்துடன் வாழ்பவர்கள். கோவையில் உள்ள ஈஷா  பவுண்டேஷன் சார்பில் பசுமைத் திருப்பூர் இயக்கம் துவக்கப்பட்டு, முதல் கட்டமாக திருப்பூரில், ஒரே  நாளில் 25000 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன.

          தமிழ் நாடு முழுவதும் 11.4 கோடி மரக் கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. முதல் மரக்கன்றை துணை முதல்வர் ஸ்டாலின் நட்டு வைத்து சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் ஈஷா பவுண்டேஷனை பாராட்டியதோடு அரசு சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று கூறினார். அடுத்த 50 ஆண்டுகளில் உலகத்தில் முக்கிய பிரச்சனையாக தண்ணீர்தான் இருக்கும். தண்ணீருக்காக உலகப்போர் நடக்கலாம், ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் மனிதர்கள் தண்ணீருக்காக அடித்துக் கொள்வதும் நடக்கும் என்று உலக சுற்றுப்புற சூழல் ர்வலர்கள் கூறுகின்றனர். தமிழகமும், கர்நாடகமும் காவிரி தண்ணீருக்கும். தமிழகமும் கேரளம், முல்லை பெரியார் தண்ணீருக்கும். பாலாற்று தண்ணீருக்கு ஆந்திர அரசுடன் மல்லுகட்டுவது இப்பொழுதே பார்த்துக்  கொண்டுதான் இருக்கிறோம். மனிதர்கள் மனது வைத்தால் இருக்கிற மரங்களை பாதுகாப்பதோடு, புதிய மரங்களை வளர்த்து பூமியை பசுமைக் காடாக மாற்றலாம்.

ஒரு காரியம் நடக்க வேண்டுமானால் பொருளாதாரமும். அதை செயல்படுத்துவதற்கு மனதும் இருந்தால்தான் காரியம் வெற்றிபெறும். அரசியலும் ஆனமீகமும், ஒன்று சேர்ந்தால் நிறைய நல்ல விசயங்களை சாதிக்கலாம் என்பது தான் மேலே கண்ட மரம் நடும் விழா. மரம் நடுவதோடு கடமை முடிந்து விட்டதாக எண்ணாமல் மூன்று வருடங்களுக்கு மரத்தை பாதுகாக்கும் பொறுப்பையும், பசுமை திருப்பூர் இயக்கம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. என்பதை நினைக்கும் பொழுது சந்தோசமாக இருக்கிறது.

அவர்கள் பணி தொடர வாழ்த்துவோம்.

10 comments:

Jerry Eshananda said...

ஈசாவின் மரக்கன்று என் வீட்டு தோட்டத்திலும் வளர்கிறது. அன்பர்களின் மேலதிக விபரங்களுக்கு http://www.ishafoundation.org/ தொடர்பு கொள்ளவும்

ஈரோடு கதிர் said...

நல்ல செய்தி

நன்றாக நடக்கட்டும்

நிகழ்காலத்தில்... said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

திருப்பூரைச் சேர்ந்தவன் என்ற முறையிலே நான் ஈஷாவிற்கு நன்றியைக் கூறுகிறேன். இது ஒரு நல்ல தொடக்கம். திருப்பூரின் பெரும் தொழிலதிபர்கள் நிச்சயம் அம்மரக்கன்றுகளை வளர்க்கும் பொறுப்பேற்க வேண்டும்.

venkat said...

thanks jerry eshananda

venkat said...

பின்னூட்டம் அனுப்பிய ஈரோடு கதிர் அவர்களுக்கு நன்றி.

ஐந்திணை said...

தண்ணீருக்காக போரா? :-(

RAGUNATHAN said...

நல்லா இருக்கு... வாழ்த்துகள்:)

venkat said...

நண்பர் ஐந்திணை அவர்களே, தண்ணீருக்கு போரா? இது அக்கப்போரா இருக்கிறதே என்றா கேட்கிறீர்கள்.
உண்மைதான் தண்ணீருக்காக பெரிய போரே நடக்கவிருக்கிறது.
வருகைக்கு நன்றி.

venkat said...

நிரஞ்சன்முத்து நன்றி நம்பிக்கையுடன் இருப்போம்.
அத்தனை மரங்களும் வளர்ந்து ஒரு நாள் கிரீன் சிட்டி திருப்பூர் என்று பெயர்வாங்கும்.