Friday, August 21, 2009

பிள்ளையாருக்கு நேர்ந்த அவமானம்.




ஒன்றே குலம் ஒருவனே தேவன்

மூஷிக வாஹன மோதகஹஸ்த
சாமரகர்ண விளம்பித சூத்ர
வாமனரூ மஹேஸ்வர புத்ர
விக்ன வினாயக பாத நமஸ்தே!!

( ஒரு பிள்ளையார் பக்தனின் ஏக்க பதிவு , படித்துவிட்டு உங்கள் கருத்தை தவறாமல் பதிவு செய்யவும்.)

தமிழகத்தில் வழிபடும் தெய்வங்களில் பிள்ளையாருக்கு மிக முக்கிய இடம் உண்டு. நாம் ஒரு காரியத்தை தொடங்கு முன் முதலில் பிள்ளையாரை வணங்கிய பிறகு தான் அடுத்தது எல்லாமுமே. அப்பேர்பட்ட பிள்ளையாரை நாம் எந்த அளவுக்கு கேவலப்படுத்துகிறோம். வினாயகர் சதுர்த்தி வந்துவிட்டாலே தொலைகாட்சிகளிலும், நாளிதழ்களிலும், வினாயகர் சதுர்தியை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு, வினாயகர் சிலைகைளுக்கு 7000 காவலர்கள் இரவு பகலாக ரோந்து. 500 சிலைகளுக்கு தினசரி வெடிகுண்டு, மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தப்படுகிறது. காவல் துறை ஆணையர் தலைமையில் அணிவகுபப்பு ஊர்வலம், ரசாயன வண்ணம் பூசப்பட்ட சிலைகளை தவிர்க்குமாறு தமிழ் நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள். போன்ற அறிக்கைகள் தவறாமல் இடம் பெறும்.

இன்று தமிழகத்தில் பட்டி தொட்டிகள் தெருவெங்கும் அனைத்து இடங்களிலும், குறிப்பாக வினாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையாரை கோலகலமாக விழா எடுத்து சுற்றுப்புறச் சூழல் மாசு பட அனைவரின் முகம் சுழிக்கும் வகையில் கொண்டாடுகிறோம். உண்மையில் பக்தி பரவசத்தில் பிள்ளையாரை வணங்குகிறோமா??? !!! ... பிள்ளையார் எந்த கால கட்டத்தில் தமிழகத்திற்கு வந்தார்? சற்று பின் நோக்கி பார்போம்.


தமிழர் வரலாற்றை அறிய இலக்கியங்களும், கல்வெட்டுகளும், அகழ்வாய்வு சான்றுகளும் உதவுகின்றன. சங்க காலத்திற்கு முற்பட்ட தொல்காப்பியத்தில் ஒரு இடத்தில்கூட பிள்ளையார் வழிபாட்டைப் பற்றி குறிப்பிடவில்லை. சங்க காலத்தில் கி.மு மூன்றாம், கி.மு இரண்டாம் நூற்றாண்டின் காலகட்டத்தில் தமிழர் சமய வரலாறை பல பாக்களால் பல அறிஞர்கள் தொகுத்துள்ளனர். சேயோன்(முருகன்), மாயோன்(திருமால்), வேந்தன் (இந்திரன்), வருணன், பழையோள். (கொறஅறவை), முக்கண்ணன் (சிவபெருமான்), பலராமன், உமை என தமிழர் வழிபட்ட தெய்வங்களை சங்க இலக்கியங்கள் பல பாடல்களில் கூறப்படுள்ளது. இங்கும் பிள்ளையாரின் வழிபாடு வரவில்லை, சங்ககாலத்தில் பிற்பட்ட கலித் தொகையிலும், பரிபாடல், ஆகிய இரண்டிலும் பிள்ளையாரைப்பற்றி வரவில்லை. என்பதை நாம் தெளிவுபடித்துக் கொள்ளவேண்டும்.

      (கி.பி ௨00 -கி.பி 500) காலகட்டத்தை சேர்ந்த திருக்குறள், மணிமேகலை, சிலப்பதிகாரம், முதலிய இலக்கியங்களில் எந்த இடத்திலும் பிள்ளையாரைப் பற்றி குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அப்பர், சம்பந்தர் இயற்றிய திருமுறைகளில் பிள்ளையாரின் தோற்றம் வடிவம் ஆகியவற்றை குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக மூத்த முழு முதல் கடவுள் என வணங்கும் பிள்ளையார் பின் நாளில் கி.பி ஏழாம் நூற்றாண்டில் தான் நாம் அறியப்படுகின்றோம். அப்பர், சம்பந்தர் ஆகியோரும் முருகப்பெருமானை குறிப்பிட்டுள்ள அளவுக்கு கூட பிள்ளையாரைப் பற்றி குறிப்புகளைத் தரவில்லை. பிள்ளையாரைப் பற்றி குறைந்த அளவே குறிப்புகள் தந்திருகின்றனர். இப்படி லேட்டாக பிள்ளையார் வந்தாலும், பிள்ளையாருக்குதான் முதலிடம். அவ்வாறான பிள்ளையாரை எப்படியெல்லாம் அவமதிக்கிறோம்.

கீழ் காணும் படங்களை பாருங்கள்.

        நான் சிறுவனாக இருந்தபொழுது வினாயகர் சதுர்த்தி அன்று களி மண்ணால் அழகாக பிள்ளையாரை செய்து வழிபாட்டுக்குப் பிறகு மறு நாள் காலை வீட்டுக்கிணற்றிலோ அல்லது குளதிலோ, ஆற்றிலோ போடுவோம். அப்பொழுது இருந்த சந்தோசம் குதூகலம் இப்பொழுது இல்லை.
வீடுகள், கோயில்களில் மட்டுமே வணங்கப்பட்ட பிள்ளையார் வீதிக்கு எப்பொழுது, எப்படி வந்தார்? 1893 ஆண்டு லோகமான்ய திலகரால், சிதறிகிடந்த மக்களை ஒன்று சேர்ப்பதற்காகவும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடவும், விநாயக சதுர்த்தியை ஒரு சமூக பண்டிகையாக மாற்றினார். மகாராஷ்டிரத்தில் ஆரம்பிக்கப்பட்டு வடமாநிலங்கள் முழுவதும் வெகு விமர்சையாக 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாடு

ஊடகங்களினாலும் வடமாநில மக்கள் அங்கிருந்து இங்கு வந்து குடியமர்ந்த பொழுதும், தமிழ் நாட்டில் பிள்ளையார் வீதிக்கு வந்துவிட்டார். ஒரு குறிப்பிட்ட  கட்சியை வளர்க்க விரும்பியவர்கள் பிள்ளையாரை ஒரு கருவியாக பயன்படுத்தி வீதிக்கு பிள்ளையாரை கொண்டு  வந்துவிட்டனர். மற்றும் பல அமைப்புகள் நான் பெரியவன் நீ பெரியவன் என்று காட்டுவதற்காக இந்த ஏரியாவில் 400 பிள்ளையார் பிரதிஷ்டை. அந்த ஏரியாவில் 1500 பிள்ளையார் பிதிஷ்டை, என்று போட்டி போட்டுக் கொண்டு பிள்ளையாரை அவமதித்து விட்டனர்.

ஆந்திராவிலிருந்து வரும் கிருஷ்ணா நதி, கர்நாடகத்திலிருந்து வரும் காவிரி, கேரளாவிலிருந்து முல்லை பெரியார் நீர் அனைத்தும் கேள்வி குறியாகிவிட்டது. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய அனைத்து இடத்திலும் சாய கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரிடையாக நொய்யல் ஆற்றிலும், மற்றும் பவானி, காவிரியிலும் கலக்கின்றன. திருப்பூரிலிருந்து வரும் சாய கழிவு ஒரத்துப்பாளையம் அணை நிரம்பி வழிகிறது. விவசாயிகளின் போராட்டம் கானல் நீராகிவிட்டது. நீதிமன்றம் தீர்ப்புக்கு பிறகும் ஒரத்துப்பாளையம் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசாகட்டும், அண்டை மாநிலமாகட்டும் செவிசாய்பதில்லை. தமிழகத்தில் கொஞ்ச நஞ்சம் இருக்கின்ற ஏரி, குளம், ஆறு, ஆகியவற்றை காப்பது நமது கடமையல்லவா? பிளாஸ்ராப் பேரிஸ் என்ற நச்சுப் பொருளினால் செய்யப்பட்டு ரசாயன கலவையால் வர்ணம் பூசிய ஆயிரக்கணக்கான பிள்ளையாரை கொஞ்ச நஞ்சம் இருக்கின்ற ஏரி, குளம், ஆறு, ஆகியவற்றில் போடுவதனால் நாம் அடுத்த சந்ததியினருக்கு விசத்தை விதைத்துவிட்டு போகிறோம் என்று பொருள்.
நாம் தான் நமக்கு பிடித்தமான மதத்தில் பிடித்தமான தெய்வத்தை பிடித்தமான வடிவத்தில் வணங்குகிறோம். தவறில்லை கடவுள் பெயரால் சமூதாய
சீர் கேட்டை அனுமதிக்க கூடாது.







கையொடுத்து கும்பிட வேண்டிய பிள்ளையாரை காலால் மிதிக்கலாமா?

நம்மை காக்க வேண்டிய பிள்ளையாரை போலிசை வைத்து நாம் காவல் வைக்கலாமா?

பிள்ளை மனம் படைத்தவர் பிள்ளையார். என்று நினைத்து பிள்ளையாரை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். பிள்ளை மனதுக்கு கோபம் வந்தால் நாடு தாங்காது.

குரல் கொடுத்தால் வலம் வருவார் பிள்ளையார், ஆகையால் வீட்டில் களிமண்ணால் பிள்ளையாரை செய்து குரல் கொடுத்து கூப்பிட்டு வலம் வரச்செய்து சந்தோசமாக வழிபடுங்கள்.

( வினாயகர் சதுர்த்தி கொண்டாடபோகிறோம், பிள்ளையார் வைக்கப்போகிறோம், என்று யாராவது டொனேசன் கேட்டு வந்தால் பணம் கொடுக்காதீர்கள். ஏதே நம்மால் ஆன சிறிய உதவி இது )

பின் குறிப்பு : ஹைதராபாத்தில்,செகன்திராபாத் என்ற இரட்டை நகரத்தின் மத்தியில் உள்ள பிரசித்திப்பெற்ற உசேன் சாகர் ஏரியில் பல வருடங்களாக ஆயிரக்கணக்கான பிள்ளையாரை போட்டதன் விளைவு இன்று ஏரி நிறைய தண்ணீர் இருந்தும், உபயோகப்படுத்த முடியாத நிலையில் கெட்டு கிடக்கிறது.

வாழ்க வளமுடன்.

6 comments:

Anonymous said...

//கையேடுத்து கும்புட வேண்டிய பிள்லையாரை காலால் மிதிக்கலாமா?//

பிறகு எப்படி பெரிய சிலையை செய்து அதற்கு பெயிண்ட் அடிப்பது?

//(கி.பி ௨00 -கி.பி 500) காலகட்டத்தை சேர்ந்த திருக்குறள், மணிமேகலை, சிலப்பதிகாரம், முதலிய இலக்கியங்களில்//

கி.பி.2- ம் நூற்றாண்டா? அதற்கும் முந்தியது திருக்குறள். கி.மு. இரண்டுக்கும் கி.பி. இரண்டுக்கும் இடைப்பட்ட காலம். வள்ளுவர் ஆண்டு என்று தமிழ்நாடு அரசு சொல்கிறது. அதில் வள்ளுவர் ஆண்டு 2032. அப்படியானால் கி.மு.இரண்டுக்கும் முந்தியது.சரிதானே?

Anonymous said...

//கையேடுத்து கும்புட வேண்டிய பிள்லையாரை காலால் மிதிக்கலாமா?//

பிறகு எப்படி பெரிய சிலையை செய்து அதற்கு பெயிண்ட் அடிப்பது?

//(கி.பி ௨00 -கி.பி 500) காலகட்டத்தை சேர்ந்த திருக்குறள், மணிமேகலை, சிலப்பதிகாரம், முதலிய இலக்கியங்களில்//

கி.பி.2- ம் நூற்றாண்டா? அதற்கும் முந்தியது திருக்குறள். கி.மு. இரண்டுக்கும் கி.பி. இரண்டுக்கும் இடைப்பட்ட காலம். வள்ளுவர் ஆண்டு என்று தமிழ்நாடு அரசு சொல்கிறது. அதில் வள்ளுவர் ஆண்டு 2032. அப்படியானால் கி.மு.இரண்டுக்கும் முந்தியது.சரிதானே?

உண்மை இப்படி இருக்க எப்படி கி.பி.இரண்டாம் நூற்றாண்டு என்று சொல்கிறீர்கள்?

venkat said...

சிலை செய்வதற்கு இன்னார் இந்த கல்லில் குறிபிட்ட நேரத்தில் சிலை வடிக்கவேண்டும் என்று சில ஆகம விதி உள்ளது.
இருக்கின்ற பிள்ளையாரை வணங்கினாலே போதும். பெரிய பெரிய சிலை சொய்யவேண்டாம் என்பது தான் நமது வாதம்.
வள்ளுவர் ஆண்டு எந்த காலத்தைச் சேர்ந்தது, என்பது பிரச்சனை இல்லை. பிள்ளையாரின் தோற்றம் எப்போது என்பதுதான் பிச்சனை.
வரலாற்று நிகழ்சிகள் அனைத்தும் வரலாற்று ஆசிரியர்கள்டையே கருத்து வேற்றுமை உண்டு

Anonymous said...

nalla pathivu

Anonymous said...

நல்ல பதிவு .

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல பதிவு .