இடைத்தேர்தல் கூத்து
நாளை 18-08-09 ஆம் தேதி தமிழகத்தில் 5 சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இடையில் வரும் தேர்தல் தேவையா? 5 சட்டமன்ற உறபினர்களில் 2 சட்டமன்ற உறுப்பினரிகள் எதிர்பாரமல் மரணமடைந்து விட்டதாலும், 2 (கம்பம்}தொண்டாமுத்தூர்) உறுப்பினர்கள் மதிமுக விலிருந்து திமுக வுக்கு கட்சி தாவிச் சென்றுவிட்டதாலும், இளையான்குடி - சட்டமன்ற உறுபினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களவை தேர்தலில் MP போட்டியிட்டதாலும், காலியாக உள்ள இடங்களுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. சுய நலத்துக்காக பதவியை ராஜினாமா செய்வதற்கெல்லாம் தேர்தல் தேவையா? ஒரு முறை தேர்தல் நடத்த, தேவையில்லாத கால விரயமும், பொருள் விரயமும் ஏற்படுகிறது. மற்றும் புதிய உறுப்பினர் தேர்தெடுக்கும் வரை மக்கள் நலப் பணிகள் நிறுத்திவைக்கப்படுகிறது. கட்சி மாறுபவர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட தடை கொண்டுவர சட்டம் இயற்ற வேண்டும். அப்பொழுதான் சுயநலத்துக்காக கட்சி மாறுபவர்களுக்கு படிப்பினையாக இருக்கும். இன்றைய திமுக வின் சாதனை என்று சொன்னால் மாற்றுக்கட்சி உறுப்பினர்களை திமுக வுக்கு இழுப்பதுதான். கம்பம்-ராமகிருஷ்ணன், தொண்டாமுத்தூர்-கண்ணபன், திருசெந்தூர்-அனிதா மதிமக வின் ராதகிருஷ்ணன், இப்படி இவர்களது பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. மாற்றுக் கட்சி உறுப்பினர்களை (பிள்ளைகளை பிடிகிறமாதிரி) பிடிச்சி பிடிச்சி போடுவதுதான் வேலை. இதை மதுரை அண்ணன் மத்திய மந்திரி சாதனையாக செய்துகொண்டிருக்கிறார். மக்கள் நலனல் கவனம் செலுத்தினால் சந்தோஷப்படலாம். மாற்றுக்ட்சியிலிருந்து வருபவர்களை ஊக்கப்படுத்துவதற்காக இந்த இடைத்தேர்தலில் கம்பம் தொகுதியில் மதிமுக லிருந்து வந்தவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளார் கலைஞர்.
இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கூட்டணிக் கட்சி தான் வெற்றி பெற வேண்டும். என்று எழுதப்படாத சட்டமாகிவிட்டது. ஜனநாயகமெல்லாம் பணநாயகமாக மாறிவிட்டது தான் காரணம்.
விழுப்புரம் சத்தியாகிரக இயகத்தின் உறுப்பினர்கள், தொண்டாமுத்தூர்(கோவை) சட்டசபை தொகுதி மக்களிடம் பணம் வாங்காமல் ஓட்டுப் போடுங்கள் என்று மக்கள் காலில் விழுந்து பிரச்சாரம் சொய்யும் காட்சி. ஒரு பாட்டியிடம் என்ன பாட்டி காலில் விழுந்து பணம் வாங்கம ஓட்டு போடுங்கள் என்று சொல்லுகிறார்களே நீங்க எப்படி பாட்டி என்று கேட்டது தான் தாமதம். டோய் போக்கெத்த பசங்களா போங்கடா பிழப்புள மண் அள்ளி போட்டுடாதீக என்று கூறினார். ஆக பணம் வெல்லபோவது உறுதியாகிவிட்டது. பணம் கொடுப்பதையோ, பரிசுப் பொருள்கள் கொடுப்பதை தேர்தல் ஆணையத்தினால் கட்டுப்படுத்தமுடியவில்லை. சட்டம் ஒரு இருட்டறை அரசியல் ஒரு சாக்கடை என்று அன்று அண்ணா சொன்னது சரியாகிவிட்டது.
கோவை தொண்டாமுத்தூர் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அன்பழகன், ஸ்டாலின்,கனிமொழி, ராசா, சிதம்பரம், இளங்கோவன், தங்கபாலு, வாசன்,நெப்போலியன் மற்றும் பலர் ரவுண்டுகட்டி பிரசாரம் செய்தனர். இடைத்தேர்தலுக்கு இத்தனை ஆர்பாட்டம் தேவையா? வழக்கம்போல் தேர்தல் முடிவு ஆளும் கூட்டணிக் கட்சி அமோக வெற்றி பெற்று விட்டது. என்றும் எங்கள் சாதனைக்கு கிடைத்த வெற்றி என்று திமுக வும், இது அராஜகத்தின் வெற்றி என்று எதிர் கட்சிகளும், மாறி மாறி புளிச்சிப்போன பதிலை சொல்வார்கள். இதை கேட்க வேண்டியது தமிழக மக்களின் தலை எழுத்து. நடந்து முடிந்த மக்களைவைத் தேர்தலின் போது கலைஞருக்கு வயதாகிவிட்டது. ஒய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்புங்கள் என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் தள்ளாத வயதிலும் சுறுசுறுப்பாக பணி செய்கிறார். ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். (இது எப்படி இருக்கு) எலக்ரானிக்ஸ் ஓட்டி மெஷினில் தில்லு முல்லு செய்து திமுக வென்று விட்டது என்றும் அதனால் பழைய முறையில் தான் ஓட்டுபோடும் முறை கொண்டுவர வேண்டும் என்று ஜெய-கூறினார். தேர்தல் ஆணையம் அத்தனை கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து. எலக்ரானிக்ஸ் மெஷினில் முறைகேடுகள் நடத்தமுடியும் என்று நிருபித்துக்காட்டுங்கள் என்று ஆனால் இந்த வாய்பையும் ஜெயலலிதா யன்படுத்õக்கொள்ளவில்லை. கூட்டி கழித்துப் பார்தால் ஜெயலலிதாவுக்கு கலைஞர் 100 மடங்கு (சில விசயங்கள் மணல் கடத்தல் தடுக்க தவறியது, திறமையில்லாத மந்திரிகளை மாற்ற தவறியது. போன்றவற்றை விடுத்து பார்க்கும்பொழது) பரவாயில்லை .
பின் குறிப்பு: கடைசி கட்ட தொண்டாமுத்தூர் (கோவை) நிலவரம். இரண்டாவது இடத்துக்கு வரும் என்று எதிர்பார்கப்பட்ட கொங்கு நாடு முன்னேற்ற கழகம் மூன்றாம் இடத்துக்கும், தேமுக விஜய்காந் இரண்டாம் இடத்துக்கும் வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மூன்று லட்சத்து நாற்பது ஆயிரம் வாக்குகள் கொண்ட தொண்டாமுத்தூர் தொகுதியில் 1 லட்சம் வாக்குகள் நகரப்பகுதியிலும் மீதிப் பேர் கிராமப்பகுதியிலும் உள்ளனர். நகரப் பகுதில் உள்ள வாக்குகள் வியகாந்துக்கு கனிசமாக விழுந்தால் விஜயகாந் வெற்றி பெற வாய்பு உள்ளதாக கணிக்கப்படுகிறது.
மீண்டும் ஒரு பின் குறிப்பு: விழுப்புரம் அருகே உள்ள காரைக்கால்குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ண சாஸ்திரி என்பரால் 2005 ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட இயக்கம்தான் சத்தியாகிரகா. வன் முறை, லஞ்சம், ஜாதி போன்றவற்றை ஒழிக்க வேண்டும் என்று விரும்பிய இவர், அதற்காக எடுத்த ஆயுதம் தான் காலில் விழும் சத்தியாகிரகம். இவருடைய முயற்சி வெற்றிபெற வாழ்த்துவோம். வாழ்த்துக்கள்.
3 comments:
கலக்கறேள் போங்கோ...எழுதுங்க எழுதுங்க,...எழுதிக்கினே இருங்க...
வர்ட்டா
சூப்பரா கலக்கறேள் போங்கோ...எழுதுங்க எழுதுங்க,...எழுதிக்கினே இருங்க...
வர்ட்டா
thanks ragu
Post a Comment