கும்பாபிஷேகம்
நாகர்கோவில் ரயிலில் கோவையிலிருந்து திருநெல்வேலிக்கு சோல்ல வேண்டி வந்தது, காலை நேரம் என்பதால் கோவையிலிருந்து ஈரோடு வரைக்கும் அலுவலகத்துக்கு செல்வோர் அளவுக்கு அதிகமாக இருந்தனால் கலகலப்பாக சென்றது. ஈரோட்டிலிருந்து ரயில் பயணம் பகலை தின்றுகொண்டிருந்தது. ரயில் பயணம் களைப்படையச் செய்தது. சிலர் தூங்கிவிட்டனர் சிலர் அன்றைய நாளிதழில் மூழ்கிவிட்டனர். பகல் 1 மணிóக்கு ரயில் திண்டுக்கல்லை அடைந்தது. அவரவர்கள் கொண்டுவந்த உணவையும், சிலர் ஸ்டேசனில் விற்றுக்கொண்டிருந்த உணவை வாங்கி உட்கொண்டனர். சில புதிய பயணிகள் ஏறினர். ரயில் சுறு சுறுப்பாக மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்து. அனைவரும் கலகலப்பாக பேசிக்கொண்டு, அன்றை ய உலக நடப்புகளை அலசிக்கொண்டிருந்தனர். திண்டுக்கல்லில் இரண்டு குருக்களும் ஏறி பயணம் செய்தனர். அவர்கள் பங்குக்கு நாட்டு நடப்பை அலசிக்கொண்டிருந்தனர். இராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகத்திற்கு சங்கராச்சாரியாரை அரசு சார்பில் அழைக்கவில்லை என்று குறைபட்டுக்கொண்டிருந்தனர். சங்கராச்சாரியாரை அழைக்கவில்லை என்பதை தேசக் குற்றம் என்பது போல் பேசிக்கொண்டிருந்தனர். பயணிகள் அனைவரின் கவனமும் இவர்கள் பக்கம் திரும்பியிருந்தது. அது வரை சும்மாயிருந்த நான் முதன்முறையாக கும்பாபிஷேகம் என்றால் என்ன? என்று கேட்டேன்.
இப்பொழுது சுற்றியிருந்தவர்களின் ஒட்டு மொத்த பார்வையும் என் பக்கம் திரும்பியது. சின்ன அமைதி குருக்களின் பதிலுக்காக! ... . கும்பாபிஷோகம் என்றால் கோவிலுக்கு சக்தி ஏத்துவது. 12 வருடத்துக்கு ஒரு முறை கண்டிப்பாக கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். நாட்டு மக்கள் சுபிக்ஷமாக இருக்க வேண்டுமானால் நம் முன்னோர்கள் சொன்னதை நாம் கடைப்பிடிக்க வேண்டும். ஏன் எதுக்கு என்று கேட்கக்கூடாது என்று பொத்தாம் பொதுவாக கூறினார்.
நீங்கள் கூறியதற்கு எதிர் வாதம் செய்யலாமா? என்று குருக்களிடம் கேட்டேன். குருக்களின் பதிலை எதிர் பார்க்காமல் சுற்றியிருந்த அனைவரும் நீங்கள் கூறுங்கள் என்று சொன்னார்கள்.
நம்முடைய கோவில்கள் அனைத்தும் கிட்டத்தட்ட முதல் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதாவது 2000 வருடத்திற்கு முந்தியவை. நமது கோயில்கள் கோபுரங்களுடன் (Tower ) கட்டப்பட்டவை. இடி, மின்னல் கோபுரத்தை தாக்கும் பொழுது, கோபுரங்கள் இடிந்து விடுவதற்கும், சில நேரங்களில் தீ பிடிப்பதற்கும் அவகாசம் உள்ளது. இடி, மின்னல்களிலிருந்து காப்பதற்காக கோபுரங்களில் கும்பம் வைத்து கும்பத்தில் வரகு (இது ஒரு தானியம்) மற்றும் சில நவ தானியங்களை நிரப்பி காற்று புகாவண்ணம் வைத்துவிடுவார்கள். கும்பமும் அதில் உள்ள தானியங்களும் இடி தாங்கியாக செயல் பட்டு இடி மின்னல்களை நீர்த்துப் போகச் செய்துவிடுகிறது. கும்பம் மற்றும் அதில் உள்ள தானியங்கள் ஆயுள் 12 வருடங்கள் தான். 12 வருடங்களுக்கு பிறகு இடி மின்னலை தாங்கும் சக்தி இழந்து விடுகிறது. அதனால்தான் 12 வருடங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறி சென்றார்கள். கும்பாபிஷேகம் செய்யும்பொழுது கோவில் அனைத்தையும் மராமத்துப்பணிகள் செய்து கும்பம் மாற்றும் பொழுது கோவில் மற்றும் கோபுரம் இரண்டையும் பாதுகாப்பதுபோல் ஆயிற்று. இது தான் கும்பாபிஷேகம். இடி தாங்கி (lightnging conductor ) 17ம் நூற்றாண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. நமது முன்னோர்கள் முதல் நூற்றாண்டிலேயே இடி தாங்கியை கண்டுபிடித்துவிட்டார்கள் என்பதுதான் சிறப்பு.
திருநெல்வேலிவரை வருகிறேன் என்று கூறிய குருக்கள் மதுரை ஸ்டேசனிலேயே இறங்கிவிட்டனர். வேறு ரயில் பெட்டியில் ஏறினார்களா என்று தெரியவில்லை. ஆக, நாங்களும் பல கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளதாக குருக்கள் கூறினார்கள். இப்படி பல பேர் ஏன் செய்கிறோம், எதற்கு செய்கிறோம், என்று தெரியாமலே நிறைய விசயங்கள் செய்கின்றனர்.
இப்பொழுது சொல்லுங்கள், கும்பாபிஷேகத்திற்கும், சங்கராச்சாரியாருக்கும், என்ன தொடர்பு. சங்கராச்சாரியார் கும்பாபிஷேகத்திற்கு வந்தால் என்ன?, வராவிட்டால் என்ன?.
அடுத்து குருக்களிடம் கலை நயம் என்ற பெயரில் கோயிலை சுற்றி மிகவும் கவர்ச்சியாக (ள்ங்ஷ்) யாக சிலை வைத்துள்ளார்கள் ஏன் என்று கேள்வி கேட்கலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால்........... .............

3 comments:
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
super pathivu
சூப்பர். சும்மா ஒரு கேள்வி கேட்டாலும் நச்சுன்னு கேட்டீங்க. ஓடி போயிட்டானுக. ஹி ஹி ஹி :)
Post a Comment