Friday, June 5, 2009

உலக நாடுகளும், ஐ.நா.வும், புடலங்காயும்....!?!?




ஏய் வெங்காய கருப்பா, ஒன்னுமே புரியமாட்டேங்குது. வந்ததும் சரியில்லை, வாய்ச்சதும் சரியில்லை. நடந்ததும் சரியில்லை,நடந்துட்டு இருக்கிறதும் சரியில்லை. ஏன்னையா ஒரே புலம்பலா இருக்குது. என்னங்கிறத தெளிவா சொல்லி தொலையும். இலங்கையில் நடந்து முடிந்துள்ள போரும், அதற்கு அப்புறம் தொடர்ந்துகொண்டிருக்கும் அவலங்களும், .நா சபையும், சர்வதேச சமூகமும் வேடிக்கை பார்த்துட்டு வேதனைப்படுத்துகிறதே.

சோனமுத்து உனக்கு மண்டையில கொஞ்சம் கம்மினு நான் நினைக்கிறேன் . .நா.சபைங்கிறது பவர்புள்ளான சபை அது தலையிட்டால் பிரச்சனை சரியாகும்னு நினைக்கிறது தப்பு.

.நா. சபைங்கிறது இளிச்சவாய் நாடுகளை மிரட்டுவதற்கு வல்லரசு நாடுகள் பயன்டுத்தும் ஒரு சாதனம். வடகொரியாவை மிரட்ட வேண்டுமா? அமெரிக்கா ஏதாவது ஒரு நாட்டின் மீது படையெடுக்க வேண்டுமா? உடனே ஒப்புதல் தர .நா. தேவை அவ்வளவுதான். .நா.சபையில் பாலஸ்தீன மக்களுக்கு சுய நிர்ணய உரிமை தர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இது வரை பிரச்சனை தீரவில்லை.
டேய் கருப்பா இலங்கை தமிழ் இன அழிப்பு கொள்கைக்கு இந்தியா இலங்கைக்கு ஏன் துணை போகிறது, ராஜதந்திர நடவடிக்கைகளா? அல்லது வெளியுறவுத் துறையில் உள்ள ஒரு சிலரின் தமிழ் விரோத மனப்பான்மையா?
சோன முத்து நீயும் நானும் தீர்கின்ற பிரச்சனை இல்லை இது. கலைஞர் ஐயாவுக்கு தான் நாம் 28 தொகுதிகளில் வெற்றிபெறச்சொய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்திருக்கிறோம். தமிழர்கள் படு கொலைசெய்வதை தடுக்க தவறிவிட்டார். இருக்கின்ற தமிழர்களையாவது காப்பாற்றுவார் என நம்புவோம்.

அப்படியும் நடக்கவில்லை என்றால் என்னடா பன்னுவது. தமிழர்களின் விதியும், சர்வதேச சமூகத்தின் சதியும் நினைத்துகொண்டு தமிழர்கள் பிச்சனையை தமிழர்கள் தான் பார்த்துக்கொள்ளவேண்டும்.

3 comments:

பகுத்தறிவு முழக்கம் said...

நான் சொன்ன திட்டுரானுவ. தி மு க பய புள்ளங்க
கலைஞரு சும்மா மெரட்டுனாலெ போதும் தல இல்லன்னா சன் டி வி ல 100 ல ஒரு பங்கு எடுத்து செலவு பண்ணுனா இலங்கை அரசை அடக்கி ஆளலாம் . ஆனல் செய்ய மட்டாரு ஏன்னா
அவருக்கு மண்ணாசயே கெடயாது ப்பூ.. அதேன்

venkat said...

தமிழ் உணர்வுள்ளவர் நீங்கள் மட்டும் தான் பகுத்தறிவு முழக்கம். தொடரட்டும் உங்கள் பணி

Anonymous said...

கருணாநிதி என்ன செய்வார் வட இந்தியா அழகிரிக்கு, தமிழகம் ஸ்டாலினுக்கு என பிரித்துகொடுத்தாச்சு மஹிந்த ராஜபக்சேவிடம் தமிழீழத்தை வாங்கி கனிமொழிக்கு கொடுக்கலாம். மஹிந்த இவரின் இடன் பிறவாச் சகோதரர் தானே நிச்சயம் இவரின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பார்.