Wednesday, March 10, 2010

தடுக்கி விழுந்தது யார்?



          ஆரம்பமாவது பெண்ணுகுள்ளே , ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே.  ஒரு கவிஞர் தீர்க்க தரிசனதுடன் சொல்லிய வார்த்தைகள்.  இன்று அத்தனை சாமியார்களின் சங்கதியும் பெண்ணாலே வீதிக்கு வந்துள்ளது. பிரோமானந்தா, ஜயேந்தரர், தேவநாதன், நித்தயானந்தம்,மற்றும் பலர். சாமியார்கள் என்று யாரும் இல்லை.  அனைவரும் மனிதர்களே. மனிதர்களுக்கே உரிய  குணாதிசியங்கள் அத்தனையும் அனைவருக்கும் பொது. மனிதர்கள் செய்யும் காரியங்களைதான் மேலே கூறிய ஆசாமிகள் சொய்துள்ளனர். ஆனால் இவர்கள் சொய்யும் பொழுது மட்டும் மக்கள் ஆவேசம் அடைவது ஏன்? ஆன்மீகம் என்ற காவி ஆடைகளுக்குள் பாதுகாப்பாக அமர்ந்து கொண்டு தப்பு சொய்யும் பொழுது மக்களுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. சாதாரணமாக இருந்த ராஜசேகரனை நித்தியானந்தனாக்கியது யார்? பொது மக்கள் தானே.

         ஆலயம் தொழுவது சாலவும் நன்று. கடவுளை வணங்குவற்கு இடைத்தரகர்கள் ஏன்?  நித்தியானந்தனை எடுத்துக் கொண்டால் பிரமாதமாக பிரசங்கம் செய்கிறார். பகவத் கீதையை புட்டு புட்டு வைக்கிறார், என்று மக்கள் உச்சு கொட்டுகிறார்கள். இதில் அதிசியப்படவோ? விசேசம் என்று சொல்வதற்கோ ஒன்றும்மில்லை. எந்தஒரு விசயத்தையும் முறையாக பயிற்சி செய்தால் அசத்திவிடலாம். அப்படித்தான் சின்ன வயதிலிருந்து பகவத்கீதை, வேதம் என்று பயின்றதனால் அதை தெளிவாக செய்கிறார்.
அதனால் அவரிடம் சக்தியிருக்கிறது என்று கூறுவது அறியாமை.

   
  
     
         மேலே உள்ள  படத்தைப் பாருங்கள் சிறுமி கயிற்றின் மீது  தலையில் கும்பம் வைத்துக்கொண்டு எதையும் பிடிக்காமல் நடந்து வருகிறாள். இதுவும் ஒருவகை பயிற்சிதான். முறையான  பயிற்சியிருந்தால், எதையும் யாராலும் செய்யலாம். நித்தாயானந்தனுக்கு காசு பார்க்கும் வித்தை தெரிந்ததனால் நடிகையின் மடியில் கோடியில் புரளுகிறான். இந்த சிறுமிக்கோ அந்த வித்தை தெரியாததனால் பிச்சை எடுக்கிறாள்.

     எப்படி தடுக்கி விழுந்தார்? கல்வி இன்று எப்படி ஒரு  வியாபாரமாகிவிட்டதோ!  அதேபோல் ஆன்மீகமும் வியாபாரமாகிவிட்டது. வியாபாரம் என்று வந்துவிட்டால் போட்டிகள், சூது, கபட நாடகம், எல்லாம் வந்துவிடும். நித்தியானந்தரின் , சீடர்களின் சூழ்சியில் பலிகடா ஆகிவிட்டார் என்றும், பெங்களூரில் நிலம் வாங்கியதில் முன்னால் மந்திரிக்கும், நித்தியானந்தத்திற்கும், பிரச்சனை ஏற்பட்டு அதில் பொறிவைத்து சிக்கவைக்கபட்டார் என்றும் கூறுகிறார்கள்.  நேரம் சரியில்லை என்றால் புடலங்காயும் பாம்பாக மாறும் என்று கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுதான் இவர் விசயத்தில் நடந்துள்ளது. கடந்த மாதம் கோவைக்கு வந்தார். வஉசி மைதானத்தில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் பண அறுவடை பலமாக செய்யபட்டது, மற்றும் பல பக்தர்கள்  வீடுகளுக்கு சென்று ஆசிர்வாதம் என்ற பெயரில் காலடி எடுத்து வைத்து கையை தூக்கி காட்டிவிட்டால் பாமர பக்தனுக்கு பரம சந்தோசம், ஒரு வீட்டுக்கு இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை வசூல் செய்ததாகவும், இதனால் கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சாமியாரின் பக்தர்களுக்கு பயம் வந்து அவர்களும் நித்தியானன்தரை சிக்க வைத்ததாக ஒரு வதந்தி உண்டு. எது எப்படியோ உப்பை திண்ணவன் தண்ணீரைக் குடித்துதான் ஆகவேண்டும். தடுக்கி விழுந்தது நித்தியானந்தமா? பொது மக்களா?

          கல்கி பகவான் ஆஸ்ரமத்தில் மோசடி மற்றும் பல தவறுகள் நடப்பதாக தகவல்கள் வந்துகொண்டுஇருக்குறது. இத்தனைக்கும் பிறகும் கல்கி பகவானைப்பற்றி தவறாக பத்திரிக்கையில் எழுதாதே என்று பத்திரிக்கைக்கு எதிராக ஆர்பாட்டம் சொய்யும் பெண்கள் கீழே உள்ள படத்தைப் பாருங்கள். 



இப்படிப்பட்ட மக்கள் இருக்கும் வரை போலி சாமியார்களுக்கு கொண்டாட்டம்தான். பணிவிடைதான் செய்தேன். ரஞ்சிதா பேட்டி.
( தெரிஞ்சிதான் கேட்கிறேன்  பணிவிடை செய்யும் பொழுது மேலே படுத்து, புரண்டு, புரண்டுதான் பணிவிடை செய்வியா?)

      சட்டதிற்கு புறம்பாக தப்பு செய்யவில்லை? அனைவரும் அமைதி காக்கவும், விரைவில் உங்கள் முன் வருவேன் நித்தியானந்தன் பேட்டி.
(ஒன்னும் புரியமாட்டிங்குதே! தலை கிர்ருனு சுத்துதே!  இப்பவே கண்ணை கட்டுதே. நண்பர்களே சட்டத்துக்கு புறம்பான தவறு, சட்டத்துக்கு உட்டபட்ட தவறு  அப்படினு இருக்குதா?  சொல்லுங்களேன்.)

 ஐயா ராசா கண்ணா நீ திரும்பி வருவே குத்தாட்டம் போடுவே ஏன்னா? உனக்கு வெக்கம்,  மானம், சூடு, சொரனை, எதுவுமே இல்லை. எங்களுக்கு தான்  கொஞ்சம் கஸ்டமாக இருக்குறது. இல்லறம் அல்லது நல்லறம் அன்று. ஒளவைப் பாட்டி 2000 வருசத்துக்கு முந்தியே சொல்லியிருக்காங்க. அதனால நீ ஒரு கல்யாணம் கட்டிகோ, இச்சையெல்லாம் தீத்துட்டு, பிறகு வா ராசா.