Friday, June 18, 2010

கோவையும், செம்மொழி மாநாடும்

.
        
மாநாடு சில காட்சிகள்.


      பல விமர்ரிசனங்களுக்கு இடையில் ஜூன் 23 ஆம் தேதி கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு கோலாகலமாக நடக்கவிருக்கிறது. குற்றங்களைப் புறம் தள்ளிவிட்டுட்டு உலகத்தமிழ் மாநாட்டினால் என்ன பயன் என்று பார்தால், கோவை நகருக்கு பல கோடி ரூபாய் செலவில் அபிவிருத்தி திட்டங்கள் பல நடந்துள்ளது. குறிப்பாக சாலை விரிவாக்கம், அழகிய   நவீன பூங்காக்கள், மற்றும் சாலையோர பூங்காக்கள், ஆங்காங்கே உயர் மட்ட கோபுர விளக்குகள், பஸ் பயணிகளுக்காக புதிய நிழல்குடைகள் அமைக்ப்பட்டுள்ளன.  
        
                                   உலகத் தமிழ் மாநாட்டினால் தமிழ் மொழிக்கு என்ன நன்மை?  தமிழ் மொழிக்கு நன்மையா? என்பதை விட கட்சி க்காரர்களுக்கு அதிக நன்மை.  பல கோடி ரூபாய் மதிப்புள்ள அபிவிருத்தி திட்டபணிகள் சரியாக திட்டமிடப்படாததாலும், கால அவகாசம் இல்லாமையாலும் பல இடங்களில் பணிகள் சரியாக செய்யவில்லை. கலைஞரின்  சொந்த பேரன்கள், Cloud nine, Red Giant என்று  ஆங்கிலத்தில் பெயர் வைத்துக்கொண்டு நடத்தும் சினிமா வியாபார  கம்பெனிகளுக்கு நல்ல  தமிழில் பெயர் கிடைக்கவில்லை. செம்மொழி மாநாட்டை முன்னிட்டு அனைத்து வியாபார நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என்று கூறுவது நல்ல விந்தை.  

   அழகிய பல வண்ணங்களில் தமிழர்களுடைய பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபளிக்கும் படி ஆங்காங்கே ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளது. பார்பதற்கு  ரம்மியமாக உள்ளது. அதுபோல்  அதியமான் அவ்வைக்கு கள்ளும், நெல்லிக்கனியும் கொடுக்கும் காட்சியை தமிழ் செம்மொழி மாநாட்டில் வைக்கவேண்டும் என்று கள் இறக்க அனுமதி கேட்டு போராடும் இயக்கங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அரசு வைக்கவில்லை என்று தெரிந்தவுடன், அவர்களே வண்ண ஓவியத்தை வைத்துவிட்டனர். 
.
சாலை எங்கே? மரம் எங்கே? பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்ட  பொதுமக்கள் எதிர்பையும் மீறி மரம் வெட்டப்படுகிறது. பங்கு சரியாக போய்விட்டதோ ! அதனால்  அரசு அதிகார வர்கம் கண்டுகொள்ளவில்லை. 
     



ஆகா என்ன அழகு!



   சாலையோர பூங்காக்கள்,



கனிமொழி இல்லையென்றால் } செம்மொழி இல்லை


பல இடங்களில் பணிகள் சரியாக செய்யவில்லை.


ஸ்டாலின் மாநாட்டு பணிகள் ஆய்வு, கலைஞர் ஓய்வு.



அதியமான் அவ்வைக்கு கள்ளும், நெல்லிக்கனியும் கொடுக்கும் காட்சி


சாலை எங்கே? மரம் எங்கே?


மாநாடு நடந்தாதான் அந்த நகருக்கு  அபிவிருத்தி பணிகள் நடக்கும் என்றால், ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு நகரிலும் நடத்தப்படவேண்டும். 
பல கோடி ரூபாய் செலவில் நடக்கும் மாநாடு   கட்சி மாநாடாக ஆகிவிடகூடாது என்பது தான் பொது மக்களின் விருப்பம்.