பிறகு திடீரென்று ஒருநாள் கோவை காவல் ஆணையர் புது உத்தரவு பிறப்பித்தார் 10-12-09 முதல் அனைவரும் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும். காரில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். செல்போன் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டினால் வண்டி பறிமுதல் செய்யப்படும் மற்றும் அபராதம் வசூலிக்கப்படும் என்று உத்தரவிட்டார். அதன்படி கடந்த 10 நாட்களுக்குள் ஹெல்மெட் அணியாதவர்களிடமிருந்து ரூ.4 லட்சத்துக்கு மேல் அபராதமாக வசூலிக்கப்பட்டது. வழக்கம்போல் எஸ்ஐ அமுதா மற்றும் போலீஸôர் செல்பபுரம் சிவானந்தா சந்திப்பில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ் வழியாக வந்த இளைஞரை மடக்கி ஏன் ஹெல்மெட் அணியவில்லை அபராதம் கட்டியே ஆகவேண்டும் என்று அபராதம் வசூலிப்பதிலேயே குறியாக இருந்தனர். ஆனால் இளைஞர் ஊரை கூட்டிவிட்டார். பொது மக்களுக்கும் காவலர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. பொதுமக்களின் எதிர்பின் காரணமாக காவலர்கள் பின்வாங்கிவிட்டனர்.
வாலிபர் ஏன் ஹெல்மெட் அணியவில்லை என்று கீழே உள்ள படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
சந்துல சிந்து பாடுவதில் நம்ம அரசியல் கட்சிகளுக்கு சொல்லியாதரவேண்டும். உடனே போஸ்டர் ஒட்டி அமர்களப்படுத்திவிட்டார்கள்.
பதிவு நிறைவாக இருக்கவேண்டுமென்பதற்காக நம்மால் முடிந்த சில படங்கள்.
முன்னால் இருக்கிறவர்கள் ஹெல்மெட் போடவேண்டும் அவ்வளவுதானே இந்த படத்தை பாருங்கள்.
முன்புறம் இருந்தாலும் ஹெல்மெட் போடு என்று சொல்லமுடியாது..
வாலிபர் ஹெல்மெட் போடமுடியாத சூழ்நிலை எடுத்துக் கூறியும், அதற்காகத்தான் மருத்துவமனைக்கு செல்வதாக கூறியும், கொக்குக்கு மீன் மீது தான் கண் இருக்கும் என்பார்கள். அது போல் அபராதம் வசூலிப்பதிலேயே ஒத்தக்காலில் நின்ற போலீஸின் கடமையுணர்ச்சிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது. இந்த கடமையுணர்ச்சி மற்ற விசயங்களில் காட்டினால் வழிப்பறி, கொள்ளையை தடுக்கலாம். காவலர்களுக்கும் ஒரு சல்யூட் அடிக்கலாம்.
3 comments:
அரசு சட்டத்தை வாபஸ் வாங்குவது மிகவும் நல்லது. தங்களது உயிரில் அக்கறை இல்லாதவர்கள் போய்ச் சேரட்டுமே. சனத்தொகையாவது குறையும்.
அவரது நிலை அவ்வாறு இருக்கும்போது அவர் மோட்டர் சைக்கிளில் வந்ததே தவறு. வைத்தியசாலைக்கு செல்பவர் ஆட்டோவில் சென்றிருக்கலாம். இப்படி சாக்கு எல்லாம் சொல்லி அணியாமல் இவர் சாலையில் செல்லும்போது விபத்தாகி இறந்தால் என்ன ஆவது? இந்தியாவில்தான் இப்படியான கேலிக் கூத்துகளைப் பார்க்க முடியம்.
எங்கூரில் சைக்கிளுக்குமே ஹெல்மெட் கட்டாயம் அணியவேண்டும். முந்தாநாள் ரெண்டு நபர்கள் பிறந்தநாள் உடையில் சைக்கிளில் போகும்போது ஒர் பெண்போலீஸ் நிறுத்தி, அவர்கள் ஹெல்மெட் போடாமல் போனதுக்கு கேஸ் புக் பண்ணி இருக்காங்க.
துளசி(நியூஸி)
கடைசிப் படம் சூப்பர்.
Post a Comment