நவராத்திரி திருவிழா ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் 9 நாட்களில் நடைபெறும். நவம் என்றால் ஒன்பது. ராத்திரி என்றால் இரவு. ஒன்பது இரவுகள் தொடர்ந்து நடைபெறுவதால், இதற்கு நவராதóதிரி என்று அழைக்கப்படுகிறது. துர்க்கா, லெஷ்மி, சரஸ்வதி ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்று சேர்ந்து உருவான பராசக்தியால் மகிஷாசுரனை வதம் செய்வதைத்தான் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.
இதில் முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையாகவும் அடுத்த மூன்று நாட்கள் லெஷ்மி பூசையாகவும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி பூசையாகவும் ஆக மொத்தம் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வீடுகளிலும், கோவில்களிலும் கொலு வைத்து வழிபடுவார்கள்.
சிலர் வீடுகளில் கொலு வைப்பதற்கென்றே தனியாக படிகள் வைத்திருப்பார்கள். நவராத்திரி நாட்களில்.அப்படிகளில் அவரவர்கள் தகுதிக்கேற்றவாறு விதவிதமான பொம்மைகள் வைத்து வழிபடுவார்கள்.இந்த நாட்களில் துர்கா, லெஷóமி, சரஸ்வதி மூலமும் ஒன்று சேர்ந்து பராசக்தியாக கொலு வீற்றிருப்பதாக ஒரு ஐதீகம். ஒன்பது நாட்களும் மவுன விரதம் கடைப்பிடித்தால் உடல் உள்ளத்திற்கு நன்மை உண்டு
வீடுகளில் கொலு வைத்திருப்பவர்கள் மாலை நேரத்தில் தினமும் ஒவ்வொரு வகையான சுண்டல்கள் அல்லது ஏதாவது ஒரு பதார்த்தங்கள் செய்து கொலுவிற்கு வைத்து வழிபட்டு பின்பு அவரவர்களுக்கு தெரிந்தவர்கள், அக்கம் பக்கம் குடிஇருப்பவர்கள் எல்லோரையும் அழைத்து அவர்களுக்கும் வெற்றிலை, பாக்கு, பழம், மற்றும் அவர்கள் செய்த பிரசாதங்களையும் கொடுத்து மகிழ்வார்கள்.
சரஸ்வதி பூஜை அன்று அனைத்து அலுவலகங்கள், கடைகள் மற்ற எல்லோரும் சரஸ்வதிக்கு பூஜை செய்து வழிபடுவார்கள்.
கடைசி நாளான விஜய தசமி அன்று பராசக்தியானவள் மகிஷாசுரனை வதம் செய்வதாக ஐதீகம். இதையே நாம் நவராத்திரியாக கொண்டாடி மகிழ்கிறோம்.
மேலே கூறியவைகளை அனைவரும் கொண்டாடுவார்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் விஜய தசமிக்கு அடுத்த நாள் ஆயுத பூஜை வெகு சிறப்பாக பட்டி தொட்டிஅனைத்து இடங்களிலும் கொண்டாடப்படும்.உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை .ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.
விஜய தசமியன்று புதிதாகத் தொழில் தொடங்குவோர், கல்வி பயில ஆரம்பிப்போர் தங்கள் பணிகளை ஆரம்பித்தல் நன்று.