வாராமல் வந்த மா (சிறிய) மழை
கடந்த சில தினங்களாக கோவையில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. இயற்கை சதி செய்துவிட்டது. இந்த வருடம் வெயிலுன் கொடுமை தாங்க முடியவில்லை என்று ஒவ்வொரு வருடமும் சலித்துக்கொள்ளும் வார்த்தை. இதிலிருந்து வெப்பதின் தாக்கம் எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம். கோயம்புத்தூரில் பொதுவாக பிப்ரவரி, மார்ச் இரண்டு மாதங்கள் வெயிலின் தாக்கம் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சிறிது அதிகமாகவும், ஏப்ரல், மே மாதங்களில் மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் குறைவாக இருக்கும். கோடைக் காலங்களில் கோவைக்கு விரும்பி மக்கள் வருவார்கள். இதெல்லாம் பழைய கதையாகிவிட்டது. இப்பொழுது கோவையும் மற்ற மாவட்டகளைப்போல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகிவிட்டது. எனது நண்பர் கோவையில் சில காலம் வேலை செய்துவிட்டு, திருவனந்தபுத்திற்கு சென்றுவிட்டார். கோடை விடுமுறையை முன்னிட்டு குடும்பத்துடன் விடுமுறையை கொண்டாட கோவை வந்தார். கோவை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஒரு வார விடுமுறையில் வந்தவர் மூன்று நாட்களில் திரும்பவும் திருவனந்தபுரம் சென்று விட்டார்.
இந்த பருவ நிலை மாற்றங்கள் ஏன் தலைகீழாக மாறதொடங்கிவிட்டது? மாற்றம் கோவைக்கு மட்டுமில்லை உலகெங்கும் இதே கதைதான். மக்ககள் தொகை பெருக்கம், திட்டமிடப்படாத வாழ்க்கை, என்று செல்லிக்கொண்டே போனாலும், குறிப்பாக மக்களிடம் விழிப்புணர்ச்சி, தனி மனித ஒழுக்கம் குறைந்த காரணத்தால் அளவுக்கு அதிகமாக மரங்களையும் காட்டையும் அழிப்பதனாலும் பருவ நிலை மாற காரணமாகிறது. பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப சாலை வசதி மேம் படுத்தவது கட்டாயமாகிறது. சாலை விரிவாக்கத்தின் போது பல நூறு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன. ஒன்றை பெற வேண்டுமானால் ஒன்றை இழந்து தான் ஆகவேண்டும். ஆனால் அவ்வாறு வெட்டப்பட்ட மரத்திற்குப்பதிலாக வேறு இடத்தில் அதிகமான மரங்கள் கட்டாயம் நடப்படவேண்டும். கோவையில் அவினாசி சாலை, திருச்சி சாலை விரிவாக்கத்தின் போது நிறைய மரங்கள் வெட்டப்பட்டதால் இந்தாண்டு அளவுகதிகமான வெப்பம். இயற்கையின் சதி ஒரு பக்கம் என்றால் அரசாங்கத்தின் சதி இன்னொரு பக்கம். மின் வெட்டு என்ற பெயரில் பல மணி நேரம் மின் சாரம் இல்லாத காரணத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் தொழில் துறையினர் அனைவரின் சாபத்துக்கும் தப்பவில்லை இந்த அரசாங்கம்.

அளவுக்கு அதிகமான வெப்பத்திலிருந்து சிறிய ஆறுதல் இன்று மதியம் 1 மணி அளவில் திடீரென்று இடியுடன் கூடிய மழை சிறிதளவே பெய்தாலும். கோடை வெக்கையிலிருந்து பெரிய ஆறுதலாகவும். ஆனந்தமாகவும் இருந்தது.